இறைவனை நெருங்க…! அர்த்தமுள்ள ஆன்மீகம்….!

இறைவனை நெருங்க...! அர்த்தமுள்ள ஆன்மீகம்....!
Advertisement
Advertisement

இறைவனை நெருங்குவதற்க்கு 8 வழிகள்…!

வேதங்கள், உபநிஷத்துகள் கற்றவனுக்கு இறைவன் அருள் கிடைக்காமல் போகலாம். வேதபாராயணம் பற்றி ஒரு வரி கூட தெரியாதவனுக்கு இறைவன் காட்சி கொடுக்கலாம்.

மேலும் இறைவழிபாட்டில் வெளிவேஷங்கள் தேவை இல்லை. இயல்பான வழிபாடே போதுமானது. இதற்கு மேலும் உதவும் வகையில் 8 வகை குணங்களை நமது ஆன்மீக சமயம் வரையறுத்துள்ளது..

1. உலகில் உள்ள எல்லா உயிர்களிடமும் அன்புடன் இருக்க வேண்டும். கருணையை கைவிடக்கூடாது. இதையே  ‘அன்பே சிவம், என்றனர்.

2. பொறுமை மற்றும் எதையும் சகித்துக் கொள்ளும் மன உறுதி வேண்டும்.

3. எந்த நேரத்திலும்  பொறாமைப்படக்கூடாது.

4. உடல், மனம், செயலில் எப்போதும் தூய்மையுடன் இருத்தல் வேண்டும்.

5. தன் முனைப்பின் காரணமாகவும், பேராசை காரணமாகவும் எழக்கூடிய வலி மிகுந்த உழைப்பு வேண்டும்.

6. எப்போதும் கலகலப்பாக இருக்க வேண்டும். இறுக்கமா இருக்க கூடாது.

7. எப்போதும் நல்ல நடத்தையுடன் இருக்க வேண்டும். தாராள மனதுடன் இருப்பது சிறந்தது.

8. எல்லா மோகங்களும் வலுவற்றவை, நிலையற்றவை என்பதை உணர வேண்டும்.

இந்த எட்டு வகை குணங்கள் மூலம் அறம், பொருள், இன்பம், வீடு அகிய நான்கையும் பெற முடியும். இவை இறைவனை எளிதில் காண உதவும்.

தொகுப்பு :- சங்கரமூர்த்தி
7373141119