எது தேவை…! எது தேவையில்லை…! நல்லவை நாம் அறிவேம்….!

எது தேவை...! எது தேவையில்லை...! நல்லவை நாம் அறிவேம்....!
Advertisement
Advertisement

உயிர் வாழ்வதற்கு உணவு தேவை…

ஆனால் புகழ் தேவை இல்லை.

மரியாதை தேவை இல்லை.

மிகப் பெரிய மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

உயிருடன் இருக்க நோபல் பரிசு அவசியம் இல்லை.

ஏனெனில்

அது எந்த உடல் தேவையையும் பூர்த்தி செய்யாது.

தேவைகள் உண்மையானவை.

ஆனால் ஆசைகள் போலியானவை.

புகழ் அடைந்து விட்டால்

அமைதியும் ஆனந்தமும், நிமதியும் நிலைத்திருக்குமா…???

தேவை என்பது உடலை நோக்கமாக கொண்டது.

ஆனால்

ஆசை மனதில் மிதந்து செல்லும் எண்ணம் மட்டுமே.

அதற்கு வேர்கள் கிடையாது

உடலின் தேவை உடலில் இருந்து வருகின்றன.

ஆனால்

ஆசைகளின் தேவைகள் அடுத்தவர்களிடம் இருந்து வருகின்றன.

ஆகையால்

தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வேறுபாட்டை

உணர்ந்தால் வாழ்வே இன்ப மயம் தான்…

தொகுப்பு: சங்கரமூர்த்தி, 7373141119