பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு மியூசியத்தில் மெழுகுச்சிலை..!

42
733
மெழுகுச்சிலை
மெழுகுச்சிலை
Advertisement

மேடம் டுசாட்ஸின் மியூசியம்

Advertisement

நம்ம ஊரில் கொடிகட்டி பறக்கும் ஹீரோக்களுக்கு நம் உள்ளூர் மக்கள் அங்கீகாரம் கொடுப்பது பெருமைதான் என்றாலும், நம்மவர்களை வெளிநாட்டினர் பாராட்டும்போது தான் அவர்களுக்கான கூடுதல் அங்கீகாரம் கிடைத்ததாக கிடைக்கிறது.மெழுகுச்சிலை

அப்படி ஒரு கெளரவம், அதிர்ஷ்டம் பின்னணி பாடகி ஸ்ரேயா கிடைத்திருக்கிறது.

ஆம்.. ஸ்ரேயாவின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தும் விதமாக உலகப்புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸின் டெல்லி மியூசியத்தில் முதல் இந்திய பாடகராக இவரது மெழுகுச்சிலை நிறுவப்படவுள்ளது.

ஸ்ரேயா கோஷல்

இந்தி மட்டுமல்லாது தமிழ் படங்களிலும் மனதை மயக்கும் பாடல்களை பாடி, இந்திய இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரேயா கோஷல்..

அதனாலேயே ஸ்ரேயா பாடுவது போன்று அவரது சிலை  அமைக்கப்பட உள்ளதாகவும், அங்கு வரும் பார்வையாளர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க அதிகளவில் விரும்புவார்கள் என்றும் அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய நடிகர்கள், கலைஞர்கள், பிரபலங்களுக்கு மத்தியில் தமது உருவதும் இடம்பெறுவது பெருமையளிப்பதாகவும் காலத்துக்கும் அழியாமல் இருப்பது என்பது அற்புதமானது என்றும் ஸ்ரேயா கோஷல் குறிப்பிட்டுள்ளார்.