நீரை வணங்கும் ஆடிபெருக்கில் நீரை திருடி அழிவை நோக்கும் தென்மாவட்டங்கள்..!

34
547
நீரை வணங்கும் ஆடிபெருக்கில் நீரை திருடி அழிவை நோக்கும் தென்மாவட்டங்கள்..!
Advertisement

நீரை வணங்கும் ஆடிபெருக்கில் நீரை திருடி அழிவை நோக்கும் தென்மாவட்டங்கள்..!

Advertisement

தூத்துக்குடி மற்றும்  திருச்செந்தூர்  ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  தனியார் தொழிற்சாலைக்கு ஒரு லாரிக்கு 5ஆயிரம் முதல் 6ஆயிரம் வரை,

அப்பகுதிகளில் அதிக அளவில் நிலத்தடி நீர் விலைபேசி அந்தந்த பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் லாரிகள் இயக்கப்படுகிறது.

நெடுஞ்சாலைகளில் போட்டி போட்டு கொண்டு தண்ணீர் லாரிகள் சென்று வருகின்றன.

இதனால் சாலைகளில் விபத்துக்கள் தொடர்ச்சியாக நிகழ்கிறது உயிர்பலிகள் ஏற்படுகிறது. 

இன்று காலை 10மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  ஸ்டெர்லைட், தாரங்கதாரா கெமிக்கல் ஆலை, உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு பல்வேறு இடங்களில்,

ஒரு லாரிக்கு 5 ஆயிரம் முதல் 7ஆயிரம் வரை தினமும் நிலத்தடி நீர் விற்கப்படுகிறது. நிமிடத்திற்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. 

இன்று ஆறுமுகநேரி தாரங்கதாரா கெமிக்கல் தொழிற்சாலைகளிலிர இருந்து தண்ணீர்  நிரப்பச்சென்ற லாரி ஆழ்வார் திருநகரி மற்றும் குரங்கணி சுற்றுவட்டார மகுதிகளில் நிலத்தடிநீர் எடுக்கப்படுகிறது.

இன்று ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தென்திருப்பேரை அருகே பாலத்தின் திருப்பத்தில் தண்ணிர் எடுப்பதற்காக லாரி வரும்போது மாடுகள் கூட்டமாக ரோட்டில்  சென்றுள்ளன.

தண்ணீர் லாரி மாடுகள் கூட்டத்தில் புகுந்ததில் 10 மாடுகள உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகின. தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள வயலில் பாய்ந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து திருநெல்வேலி-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தாமிரபரணி ஆறு, குளம்,குட்டைகளில்  தண்ணீர் இல்லாதமல் விவசாயம் செய்யமுடியாத நிலை இருந்து வருகிறது. 

இதனால் கால்நடைகளும், பொதுமக்களுக்கு குடிநீருக்காக பறிதவிக்கின்றனர் 

விவசாயம் ,குடி தண்ணீர் இல்லாத  நிலையில் அரசு அதிகாரிகளின் துணையுடன் ஒவ்வொரு இடங்களிலும் அதிக கமிசன்களை பெற்றுக்கொண்டு அரசு அதிகாரிகள் கண்டும் காணாத்துமாக  இருக்கின்றனர்.

ஒரு நாளைக்கு குரைந்த்து  10ஆயிரத்துக்கும்  மேற்பட்ட கேஸ் மற்றும் பெட்ரோல் நிரப்பும் லாரிகள் மூலமும் நிலத்தடி நீர் உறுஞ்சி  எடுத்து வருகின்றனர்.

கடந்த 5மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் எடுப்பதால் ஸ்ரீவைகுண்டம் கல்குவாரி, பொன்னன்குறிச்சி, பேட்மாநகரம் கல்குவாரிகளிலும்

புதுக்கோட்டை, தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகள்,ஆழ்வார்திருநகரி,ஏரல், குரங்கணி உள்ளிட்ட பல இடங்களில் மோட்டார் பம்பு மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சி விலைக்கு விற்கப்படுகிறது.

நிலத்தடி நீர் பூமியில் வற்றியதால தென்னை, பனைமரங்கள், வாழைகள், கருகி காணப்படுகின்றன.

உடனடியாக அரசு இந்த தண்ணீர் கொள்கையை தடுக்காவிட்டால் தென்மாவட்டம்  பகுதிகள் அழிவு ஏற்படுவது  நிச்சயம்.

அழிவில் முதலிடத்தில் தூத்துக்குடி..

தென் மாவட்டங்களில் மிகுந்த இக்கட்டான நிலையில்  இருப்பது தூத்துகுடி தான்.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் இன்றி  விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டது….

தூத்துக்குடி தாமிரபரனி ஆறு உப்பு நீர் ஆக மாறிவருகிறது .ஆத்தூர் ரவுண்டான வரை கடல் நீர் கலந்துள்ளது

ஏரல், திருச்செந்தூர் பகுதியில் உள்ள தென்னை மரங்கள் கழுத்து முறிந்து சாகிறது…இனி தேங்காய் விலை அதிகரிக்கும்

தனியார் கம்பெனியின் தேவைக்காக குரங்கனி,ஏரல்,போன்ற ஊர்களில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு விற்க்கப்படுகிறது

தூத்துக்குடியில் இதுவரை எள்அளவும் மழை இல்லை. காரணம் ஸ்டெர்லைட்….

இது இருக்கும் வரை மழைக்கு வாய்ப்பில்லை மாறாக புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கிறது

தூத்துக்குடியில் ஏதோ பெயர்க்காக குளங்களை சீரமைக்கிறார்கள் நல்ல மண் எங்கு கிடைக்கிறதோ அங்கு மட்டுமே மண் எடுத்து விற்கிறார்கள்..

தற்போது விளாத்திகுளம் மக்கள் ஆட்சியரை சந்தித்து விவசாயம் இல்லை எனவே மாற்று வேலை ஏற்பாடு செய்து தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர் …

ஓட்டபிடாரம் மக்கள் கடும் குடிநீர் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்…

சாயர்புரம்,கூட்டாம்புளி,சாலை பகுதிகளில் உள்ள  வாழை தண்ணீர் இல்லாததால் கருகி வருகிறது .இதனால் வாழை இலைகள் விலை உயரும் .

பதனீர் கொடுத்து வந்த பனை மரமும் தற்போது உடன்குடி,ஆறுமுகநேரி பகுதிகளில் கருகின…இதனால் கருப்புகட்டி விலை உயரும்

ஸ்ரீவைகுண்டம் முதல் பழையகாயல் வரை செல்லும் தாமிரபரனி தண்ணீரை தடுக்க ஒரு பெரிய அணை இல்லை …

இதனால் தூத்துக்குடி மாநகராட்சி மக்களே தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்…

தற்போது தூத்துக்குடி கடும் பஞ்சத்தை நோக்கி செல்கிறது …..இதை நிலை தொடர்ந்தால் முதலில் அழிவது தூத்துக்குடிதான்…..

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119