கடுமையான தண்ணீர் பஞ்சம்! முற்றுப்புள்ளி வைத்தது நகராட்சி!!

88
1252
கடுமையான தண்ணீர் பஞ்சம்! முற்றுப்புள்ளி வைத்தது நகராட்சி!!
Advertisement

கடுமையான தண்ணீர் பஞ்சம்! முற்றுப்புள்ளி வைத்தது நகராட்சி!!

Advertisement

பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்டு 36- வார்டுகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடுமையான தண்ணீர் பஞ்சம்! முற்றுப்புள்ளி வைத்தது நகராட்சி!!

இந்நகருக்கு தேவையான குடிநீரானது நகராட்சியின் சார்பில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும், போர்வெல்கள் மூலமாகவும் வழங்கப்பட்டு வந்தது.

ஒரளவுக்கு குடிநீர் பிரச்சனை தீர்ந்த போதும், கடந்த தி.மு.க ஆட்சியில் திருச்சியில் இருந்து இராமநாதபுரம் வரை,

“காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம்” கொண்டு வரப்பட்டு நகரின் குடிநீர் பிரச்சனையை முழுவதுமாக போக்கினர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து வழங்கப் பட்ட தண்ணீரின் அளவு குறைந்தது.

பின்பு, குடிநீர் பிரச்சனை மீண்டும் தலை தூக்கியது., ஆழ்துளை கிணறுகள் மற்றும் போர்வெல்கள் என அனைத்தும் வற்ற துவங்கின. 

மக்கள் குடிநீர் பிரச்சனையால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

                                      

இதன், தொடர்ச்சியாக நகராட்சி ஆணையாளர் வீட்டை முற்றுகையிட்டு பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

தொடரும் மக்களின் போராட்டத்தை கவனத்தில் கொண்டு விரைந்து செயல் பட்ட பரமக்குடி நகராட்சி நிர்வாகம்.,

                                      

வைகை ஆற்றுப் படுகையின் கரையோரத்தில் 7-போர்வெல்களை அமைத்து, பரமக்குடி நகருக்கு லாரி மற்றும் டிராக்டர்களில் இலவசமாக குடிநீர் வழங்கினார்கள்.

                                            

இதனைத் தொடர்ந்து, மேலும் நான்கு புதிய போர்வெல்களை அமைத்து நகரின் தண்ணீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

அனைத்து வார்டு பொதுமக்களுக்கும் குடிநீர் விரைவில் சென்றடைய வேண்டும் என்பதற்காக,

நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் லாரிகள் மூலமாகவும், வாடகை லாரிகள் மூலமாகவும்  பொதுமக்களுக்கு “இலவசமாக” வழங்கப் பட்டு வருகிறது.,

ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள இளைஞர்கள் தண்ணீர் லாரிகளை வரவழைத்து, பொதுமக்கள் சண்டையிடாமல் பிடித்து செல்ல உதவி புரிகிறார்கள்.

இவர்களின் சேவை மனப்பான்மையையும்.,  தண்ணீர் பிரச்சினைக்கு நகராட்சி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவையும் பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

செய்தி :- பரமக்குடி முத்துகுமார்