நீர் நிலைகள் சீரமைக்கப்படும்- மதுரை ஆட்சியர்..!

நீர் நிலைகள் சீரமைக்கப்படும்- மதுரை ஆட்சியர்..!
Advertisement
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து நீர் நிலைகள்சீரமைக்கப்படும் என தேசிய நீர் விருதுகள் பெற்ற மதுரை ஆட்சியர்நடராஜன் பேட்டியளித்துள்ளார். நீர் நிலைகள் சீரமைக்கப்படும்- மதுரை ஆட்சியர்..!
மத்திய நீர் வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நீர் விருதுகள் 2018 நேற்று புதுடில்லியில் வழங்கப்பட்டது.
இந்தியாவின் தென் மண்டலத்தில் நீர் நிலைகளை புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குதல் பிரிவில் மதுரைக்கு முதல் விருதும், நிலத்தடி நீர் செறிவுட்டல் பிரிவில் மூன்றாம் விருதும் அறிவிக்கப்பட்டது.

Advertisement

மேற்க்கண்ட இரண்டு விருதுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து இன்று மதுரையில் செய்தியாளர்களுகளிடம் கூறுகையில்
’கண்மாய்கள், வரத்து கால்வாய்கள் சீரமைப்பு செய்யப்பட்டதற்கு விருதுகள் வழங்கப்பட்டது.
நீர் நிலைகளை புனரமைப்பு பணிகள் தொடர்ந்து சீரமைக்கப்படும். தண்ணீர் கொண்டுசெல்ல முடியாத இடங்களில்கூட தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
வைகை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெறும்’ எனத் தெரிவித்தார்.