கொலைக்கு குரல்…? 8- விசுவாசிகள் பரிதாபம்….”தி பெந்தெ கொஸ்தே” அதிர்ச்சி நடவடிக்கை…

பாஸ்டர் செல்லப்பாண்டி.

0
535
Advertisement

“தி பெந்தெ கொஸ்தே”

Advertisement

பரபரப்பான…! தூத்துக்குடி மில்லர்புரம் கொலை வழக்கில் ஒன்றை ஆண்டு கால வீட முயற்சியில்,   முதல் கட்ட….! கொலையாளிகளை கைது செய்தது, உலகில் உள்ள ஒட்டு மொத்த “தி பெந்தெ கொஸ்தே” திருச்சபை விசுவாசிக்கும் ஒரு ஆறுதலான செய்தியாகும்.

பாஸ்டர் கனகராஜ் மார் அடைப்பில் மரணத்தை தழுவிக்கொண்டார், இது ஆண்டவரின் கட்டளைப்படி நடந்த மரணம், என்று அந்தப் படுகொலையை மூடிமறைக்க திருச்சபை ஊழியர்கள் முயன்ற போது.

அதற்கு எதிராக உண்மையான விசுவாசிகள், கிளர்ந்து எழுந்தனர்.
அது சமயம் புதியதாக பொறுப்பு ஏற்ற இன்றைய பாஸ்டர் செல்லப்பாண்டியும், கொலையாளிக பற்றி அக்கரையுடையன் செயல் படவில்லை என்று குரல் கொடுத்தார்கள்.

மேலும் பாஸ்டர் செல்லப்பாண்டியனுக்கு புதிய ஏற்பாடு என்ற ஒரு வேதாகமமும் உண்டு என்பது அவருக்கு தெரியாத….?

அவருடைய செயல்பாடுகள் அவருடைய பிரசங்கங்கள் அனைத்தும் பழைய ஏற்பாட்டு வேதாகமத்தில் உள்ளதுபோல நடக்கின்றது என்று விசுவாசிகள் அறிக்கை விட்டார்கள், அந்த அறிக்கை…. சபையில் பெரிய சலசலப்பை உண்டாக்கியது.

சலசலப்பை உண்டாக்கி அந்த அறிக்கையில்…..

   “”பாஸ்டர் செல்லப்பாண்டியன தனி ஒரு மனுஷனை பிரியப்படுத்தும் விதமாக (மனோகரன் இவர் ஆரம்பத்தில் இது கொலை அல்ல, மரணம் என்றவர்) பிரியப்படுத்துவதற்காக சபை ஆராதனையை தடை செய்து விட்டார்.

வேதாகமத்தில் பவுல் கலாத்தியர் சபையைப் பார்த்து கலாத்தியர்1:10ல் மனுஷரையா பிரியப்படுத்த பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரை பிரியப்படுத்துகிறவனாய் இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் அல்லவே” என்றும்

இன்று சபைக்குள் விசுவாசிகள் மத்தியில் இரண்டு கோஸ்டிகளாக உருவாக்கி அதில் ஒரு கோஸ்டியை தனக்கு சாதகமாக வைத்துக் கொண்டு எங்களது சங்கத்திற்கு எதிராக புகார் கொடுப்பதும் சபிப்பதும் போன்ற செயல்களை பாஸ்டர் செல்லப்பாண்டியன் நிறுத்திக் கொண்டு விசுவாசிகளான சகோதரர்கள் இருதரப்பினரையும்

சமாதானம்படுத்த வேண்டும்படி நாங்கள் கிறிஸ்துவுக்குள் விரும்புகின்றோம்.

த பெந்தெகொஸ்தே சபை விசுவாசிகள் நலச்சங்கம்
தூத்துக்குடி…” என்று இருந்தது.

இதனிடையே குற்றவாளிகளை பிடித்த காவல்துறை ஆய்வாளர் ஹரியை சால்வை அணிவித்து பாராட்டினார்கள்.

உண்மைக்கு குரல் கொடுத்த விசுவாசிகள் நலச்சங்க பொறுப்பாளர்கள்.

இது சபையின் மேல் மட்ட ஊழியர்களுக்கு மேலும் எரிச்சலை உண்டாக்கியிருப்பதில் சந்தேகமில்லை.

காரணம் நேற்று நடந்த ஆராதனை கூட்டத்தில், கொலைக்கு குரல் கொடுத்த…. 8- விசுவாசிகளை எந்த விதமான முன் அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் சபையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்கள்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…..!

cellapandi

இது குறித்து பாஸ்டர் செல்லபாண்டியனிடம் தொடர்பு கொண்டு பேசிய நாம் பேசிய போது அவர் கூறியதாவது ;- “எல்லாவற்றையும் ஆண்டவர் அறிவார். எல்லோரும் கண்டபடி கூச்சலிட……!, திருச்சபை ஒன்றும் சட்டசபையோ…. பார்லிமெண்டோ கிடையாது…!

ஆராதனையில் தொடர்ந்து தொல்லை செய்தவர்களை தான், நீக்கம் செய்யப்பட்டது.
இது அவர்களுக்கே நன்றாக தெரியும்….!

அவர்கள் குறிப்பிடும் மனோகர் தனது தவறான கருத்துக்கு சபையில் வருத்தத்தை தெரிவித்துள்ளார் இது அனைவருக்கும் தெரியும்.

கொலை குற்றவாளிகளை பிடிக்க நாங்களும் ஒத்துழைப்பு தந்தம் என்பதை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியும்.

இது குறித்து ஆய்வாளர் ஹரியிடம் தொடர்பு கொண்ட போது….. “மன்னிக்கவும் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது…..! என்று தொடர்பை துண்டித்துக்கொண்டார்.

மேலும் நீக்கப்பட்டவர்கள சபையில் மன்னிப்பு கேட்டால் சபை ஏற்றுக்கொள்ளும்…..” என்றார் பாஸ்டர் செல்லப்பாண்டி.

கொலைக்கு குரல் கொடுத்தவர்கள்….! அடுத்து என் செய்யப் போகிறார்கள்….? இது மில்லர்புரத்தில் மில்லியன் டாலர் கேள்வி…..!