கதிராமங்கலத்திற்காக குரல் கொடுத்த விஜயகாந்த்..!

5
358
கதிராமங்கலத்திற்காக குரல் கொடுத்த விஜயகாந்த்..!
Advertisement

கதிராமங்கலத்திற்காக குரல் கொடுத்த விஜயகாந்த்..!

Advertisement

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராடி வரும் பொதுமக்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

கதிராமங்கலத்தில் அவர் பேசியதாவது:

போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய அவர்,

”கதிராமங்கலத்தில் மக்களுக்குத் தெரியாமலே இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்க அரசு நடவடிக்கை வேண்டும்.

கதிராமங்கலத்துக்கு ஓஎன்ஜிசியைக் கொண்டு வந்ததில் திமுக, அதிமுகவுக்கு பங்கு இருக்கிறது.

இங்கு பிரச்சினையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்காக நான் வரவில்லை. மக்களுக்காகப் போராடவே வந்திருக்கிறேன்” என்றார்.

மேடையில் பேசிய அவருக்கு பொதுமக்கள் பச்சை நிறத் துண்டை போர்த்தினர்.

அவர்களின் தோள்களில் கைபோட்டிருந்த விஜயகாந்த் சிறிது நேரம் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தார.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்,

”கதிராமங்கலத்தில் பொதுமக்களும், விவசாய நிலங்களும் அடைந்துள்ள பாதிப்புகளை அரசுக்குப் பதியவைக்கவே போராட்டம் நடத்தப்படுகிறது” என்றார்.

கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்: ரோகிணி