ரேன்சம்வேர் வைரஸ் தாக்கிய கணினிகளை சரி செய்கிறார் சிறுமி விஷாலினி…!

1
293
ரேன்சம்வேர் வைரஸ் தாக்கிய கணினிகளை சரி செய்கிறார் சிறுமி விஷாலினி…!
Advertisement

ரேன்சம்வேர் வைரஸ் தாக்கிய கணினிகளை சரி செய்கிறார் சிறுமி விஷாலினி…!

Advertisement

கம்ப்யூட்டர்களை பாதித்து வரும் ரேன்சம்வேர் வைரசை சரி செய்வது குறித்து, ரேன்சம்வேர் வைரஸ் தாக்கிய கணினிகளை சரி செய்கிறார் சிறுமி விஷாலினி…!

 மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள், நெல்லை சிறுமி விஷாலினியிடம் விவாதித்துள்ளனர்.

நெல்லையைச் சேர்ந்த, கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதியின் ஒரே மகள் விஷாலினி( 16)

சிறு வயதிலேயே, மைக்ரோசாப்ட், சிஸ்கோ போன்ற நிறுவனங்களில் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றவர்.

9ம் வகுப்புக்கு பின், தற்போது பல்கலைக் கழகம் ஒன்றில், தகவல் தொழில்நுட்பத்தில், பி.டெக்., இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும், ரேன்சம்வேர்   வைரஸ் பாதிப்பு குறித்தும், வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர்களை, சரி செய்துவது குறித்து, தற்போது ஆய்வில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்று, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன்,

‘வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர்களை சரிசெய்து தருமாறும், அதற்கு என்னென்ன உபகரணங்கள், உதவிகள் தேவை’ என, சிறுமி விஷாலினியிடம் கேட்டுள்ளார்.

இதே போல, பிரதமர் மோடியின் அலுவலகத்தில் இருந்தும் அதிகாரிகள், மொபைலில் தொடர்பு கொண்டு, மெயில் அனுப்ப கேட்டுக் கொண்டனர்.

இத்தகவலை தெரிவித்துள்ள அவரது தாயார் சேதுராகமாலிகா, ”மத்திய அரசு கேட்டுக் கொண்டால், வைரஸ் நீக்கும் பணியில் விஷாலினி ஈடுபடுவார்,” என்று கூறியுள்ளார்.

இந்த தகவலுக்கு பிறகு வைரஸ் தாக்குதலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்பப்படுகிறது.