சிங்கம்- 4 ல் விஜய்யா? சூர்யாவா?

132
1897
சிங்கம்- 4
Vijay vs Surya
Advertisement
Advertisement

சிங்கம் ஒன், ட்டூ, என்று வரிசையாக சூர்யாவுக்கு ஹிட் கொடுத்த இயக்குநர் ஹரி, சிங்கம் 3 ஐ இன்னும் சில வாரங்களில் வெளியிட இருக்கிறார்.

அதற்குள் அவருக்கு சிங்கம்- 4 பகுதிக்கான அட்வான்சை கொடுத்துவிட்டதாம் ஒரு பெரிய நிறுவனம்.  

ஆக ஹரியை வேறு கதையை யோசிக்க விட மாட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க, இந்த சிங்கம் -4ல் நடிக்கப் போகும் ஹீரோ யார் என்பதில்தான் ஒரே இழுபறி.

விஜய் ஹரி சந்திப்பு நடந்து, அதுவும் பாசிட்டிவ்வாக பதில் வந்து பல மாதங்கள் ஆகி விட்டது.

இந்நிலையில் தான், ஹரிக்கு அட்வான்சை தட்டிவிட்ட அந்த பெரிய நிறுவனம், ‘விஜயா, சூர்யாவா? அது உங்கள் விருப்பம்’ என்று கூறிவிட்டதாம்!

சிங்கமே சிங்கமாகப்போகிறதா? புலி அடுத்து சிங்கமாக போகிறதா..? பொறுத்திருந்து பார்க்கலாம். 

www.tamilcheithi.com