வெளியானது நடிகர் விஜய் மகன் இயக்கிய குறும்படம்..!

0
107
வெளியானது நடிகர் விஜய் மகன் இயக்கிய குறும்படம்..!
Advertisement
Advertisement

ஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி நடித்துள்ள ஜங்ஷன் குறும்படம் வெளியாகியுள்ளது.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கேமராவுக்கு பின்னால் இருக்க ஆசைப்படுகிறார்.

அதாவது தாத்தா எஸ்.ஏ.சி. போன்று இயக்குனராக விரும்புகிறார் அவர். இந்நிலையில் அவர் ஜங்ஷன் என்ற குறும்படத்தை இயக்கி நடித்துள்ளார்.

சஸ்பென்ஸாக போகும் அந்த குறும்படத்தில் தன்னை ராகிங் செய்யும் ரோஹித் என்பவரை தாக்க முடிவு செய்து செல்கிறார் ஜேசன்.

ரோஹித்திற்காக ஒரு இடத்தில் காத்திருக்கிறார். கையில் கிரிக்கெட் மட்டையுடன் வரும் ரோஹித் மீது அந்த வழியாக வந்த கார் மோதவே ஜேசன் அதிர்ச்சி அடைகிறார்.

காரில் இருந்து இறங்கிய வாலிபர் கிரிக்கெட் மட்டையையும், ஜேசனையும் மாறி மாறி பார்த்தபோது தாக்கப் போகிறார் என்று நினைத்தால் ஒன்றும் நடக்கவில்லை.

ரோஹித்தை காப்பாற்றாமல் கிளம்பிச் சென்றுவிடுகிறார். அந்த நபர் கிளம்பிய பிறகு ரோஹித் அருகே வந்து பார்க்கும் ஜேசன் அதிர்ச்சியில் உறைகிறார்.

ஜேசன் சஞ்சயின் நண்பர்கள் இருவர் வந்து அவரை அழைத்துக் கொண்டு செல்வது போன்று குறும்டம் முடிகிறது.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற சஸ்பென்ஸை நன்றாக மெயின்டெய்ன் செய்துள்ளார் சஞ்சய்.

அந்த குறும்பட லிங்கை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

ஜேசன் சஞ்சய் படங்களை இயக்கிக் கொண்டே நடித்தால் நன்றாக இருக்கும் என்பது விஜய் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.