20 ஆண்டுகளை கடந்த விஜய் !

33
1253
20 ஆண்டுகளை கடந்த விஜய்
Advertisement
Advertisement

குறிப்பிட்ட சில சேனல்களை மட்டுமே அழைத்து, செல்லாத நோட்டு குறித்து விஜய் கருத்து சொல்ல, என்ன இப்படி செய்து விட்டார் விஜய் என மற்ற ஊடகங்கள் பொசுங்கி விட்டன.

எப்படியோ, செய்தது தவறு என்பதை உணர்ந்த அவர், கடுகு உளுந்தம்பருப்பு சேனலில் இருந்து கான்கிரீட் சேனல் வரைக்கும் மீண்டும் ஒரு முறை ‘எல்லாரும் வாங்க’ என அழைத்திருந்தார்.

ஆனால் ‘வரும்போது கேமிரா வேண்டாம். சும்மா கை குலுக்கிட்டு கிளம்புங்க. நோ பேட்டி’ என கண்டிஷனும் விதித்திருந்தார்.

அப்புறம் எதுக்கு கூப்புடணும்.? என்று மீண்டும் கொந்தளித்தவர்களுக்கு, இது விஜய்  சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆனதற்கான மகிழ்ச்சி சந்திப்பு என்பது தெரியாது.