நயன்தாரா அழகான வலிமையான போராளி – விக்னேஷ்சிவன் பாராட்டு மழை

0
577
விக்னேஷ்சிவன்
Advertisement

விக்னேஷ்சிவன் பாராட்டு மழை 

 
Advertisement

தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ்சிவனும் காதலர்கள் என்று நீண்டநாட்களாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதை நிரூபிக்கும் வகையில் மகளிர் தினத்தில் விக்னேஷ்சிவன் நயன்தாராவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து மழை பொழிந்துள்ளார். அதில்….

“ அழகான போராளி. அத்தனை வலிகள், தோல்விகளுக்கு மத்தியில்… இதுவரை வந்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள். மெக்சிக்கோவில் ஏதாவது பிரச்சினை என்றாலும், அதில் மக்கள் உங்களுடைய பெயரை இழுத்தாலும் கூட சிரித்துக்கொண்டே செல்கிறீர்கள்.

வலுவாக, நம்பிக்கையுடன் நல்லதை நினைப்பது… நயன்தாராவாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. நான் சந்தித்த பெண்களில் மிகவும் வலிமையான, அழகான பெண்ணுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்’ என்று மனம் குளிர பாராட்டி மகிழ்ந்துள்ளார்.