எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்..!

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்..!
Advertisement
Advertisement

தமிழ் இலக்கியத்துறையில் 57 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி புதுச்சேரியில் காலமானார்.

புதுச்சேரியில் ஏப்ரல் 27, 1942ம் ஆண்டில் பிறந்தவர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். புதுச்சேரியில் பள்ளி படிப்பை முடித்த இவர், கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார்.

தஞ்சாவூரில் ஆசிரியராக பணியை தொடங்கிய சாரங்கபாணி வைத்தியலிங்கம், தனது பெயரை பிரபஞ்சன் என்று மாற்றிக்கொண்டு வார பத்திரிக்கைகளில் பணியாற்றினார்.

தமிழ் இலக்கியத்துறையில் 57 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பிரபஞ்சன் 46 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் தெலுங்கு, இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.