வெண்டைக்காய் தக்காளி மிக்ஸ் பிரட்டல்

229
1068
வெண்டைக்காய் தக்காளி மிக்ஸ் பிரட்டல்
Advertisement

வெண்டைக்காய் தக்காளி மிக்ஸ் பிரட்டல்

Advertisement

தேவையான பொருட்கள் வெண்டைக்காய் தக்காளி மிக்ஸ் பிரட்டல்

பிஞ்சு வெண்டைக்காய் – 400 கிராம் (நறுக்கவும்),

நறுக்கிய மல்லித்தழை – சிறிது,

பழுத்த பெங்களூர் தக்காளி – 2,

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1,

பூண்டு – 7 பல்,

மிளகாய்த்தூள் – காரத்திற்கு ஏற்ப,

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கு,

நல்லெண்ணெய் – 1½ டேபிள்ஸ்பூன்

செய் முறை:-

கடாயில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி, மஞ்சள் தூள், வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெண்டைக்காய் வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூளை   சேர்த்து தக்காளியை போட்டு வதக்கவும்.

தக்காளியுடன் வெண்டைக்காய் சேர்ந்து நன்கு கலந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

மல்லித் தழையைத் தூவி காலிஃப்ளவர் சாதத்துடன் பரிமாறவும்.