வேலை புறக்கணிப்பு…வேலூர் அரசு மருத்துவமனையில்…

மத்திய அரசு கொண்டு வரும் தேசிய மருத்துவ ஆணையத்தை கைவிட வேண்டும்.

0
249
Advertisement

வேலூர் மாவட்டம்

Advertisement

திருப்பத்தூரில்தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் மருத்துவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக  அரசு மருத்துவர்கள் ஒரு மணி பணி புறக்கணித்து மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்  திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இன்று ஒரு மணி நேரம்  பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இந்தியா சுதந்திரத்திற்கு பின் நடைமுறையில் உள்ள இந்திய மருத்துவ கழகம்  மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் மத்திய அரசு கொண்டு வருகிறது.

மருத்துவம் கழகத்திற்கு இருக்கும் அதிகாரத்தை மத்திய அரசு தனது நிர்வாகத்துக்குள் கொண்டு வருவதை கண்டித்தும். தற்போது மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டத்தில் 5 மாநிலங்கள் மட்டுமே வரும் மீதமுள்ள 25 மாநிலங்கள் பெரும் அளவில் பாதிக்கப்படும்.

புதிய சட்டத்தால் தனியார் மருத்துவ கல்லூரிகள்  அதிகளவில் உருவாகும்.இதனால் ஏழை மற்றும் கிராம புற மாணவர்களின் மருத்துவ கல்விக்கு பல தடைகள் உருவாகும்.

நோயாளிகள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். எனவே மத்திய அரசு கொண்டு வரும் தேசிய மருத்துவ ஆணையத்தை கைவிட வேண்டும். என்  போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

SHARE