வருகிறது வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக்:

337
2084
velaikaran firstlook
Advertisement
Advertisement

தனி ஒருவன் ஹிட்டுக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கும் படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயன், நயன் தாரா, ஃபகத் பாசில் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதனால் இப்படத்திர்க்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே 1 அன்று வெளியிடப்படும் என்று செய்தி வந்துள்ளது. ஆனால் அன்று எந்த ஃபர்ஸ்ட் லுக்கும் ரீலீஸ் ஆகவில்லை. படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இப்போது ஃபர்ஸ்ட் லுக் ரீலீஸ் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

பாட்டுக்கு மலேசியா:

மலேசியாவில் பாடல் படப்பிடிப்பில் உள்ளது படக்குழு. அங்கு சூட்டிங் முடிந்த பிறகு வரும் ஜுன் 5 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம். மே 30 ல் தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் தொடங்கவிருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் தன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஸ்ட்ரைக் நாட்களிலேயே வெளியிடுகிறார்.

-சத்ய மனோஜ்