இன்று வரலட்சுமி விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

84
1504
இன்று வரலட்சுமி விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
Advertisement

இன்று வரலட்சுமி விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

Advertisement

வரலட்சுமி விரதம் ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை அனுசரிக்கவேண்டிய விரதம் இது.

அதன்படி  வரலட்சுமி விரதம் ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று  (ஆகஸ்டு 4-ந்தேதி) அனுசரிக்கப்படுகிறது.

இந்த விரதம் பிறந்த கதையை விரிவாக பார்க்கலாம்.

வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள்.

பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும்.

இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி.

இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள்போல் கருதாமல்,

இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள்.

அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மகாலட்சுமி, சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள்.

என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன் என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி,

அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள். அதை அப்படியேச் செய்தாள் சாருமதி. இப்படித்தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.

விரதம் இருக்கும் முறை..

பூஜை செய்யப் போகுமிடத்தில் இழை கோலம் போட்டு காவியிட்டு ஒரு தட்டில் அட்சதை(அரிசி)யைப் பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை அதன் மீது வைக்க வேண்டும்.

கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக் காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழமும் வைத்து மாவிலையைக் கலசத்தின் மீது வைத்து அதன் மீது தேங்காயை வைக்கிறோம்.

அம்மனின் முகத்தைக் கலசத்தோடு இணைத்து வைத்து விளக்கேற்றி வெண்பொங்கல் நிவேதனம் செய்கிறோம்.

அம்மனை அழைப்பதாக உள்ள பாடல்கள் பாடி வரலட்சுமி அம்மனை வரவற்கிறோம்.

திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் வரலட்சுமி விரதத்தன்று புதுமணம் முடித்த பெண்ணிற்கு இந்நோன்பு எடுத்து வைக்கப்படும்.

புகுந்த வீட்டில் இந்நோன்பு அனுசரிக்கும் வழக்கம் உள்ள வீடுகளில் பெண்கள் வரலட்சுமி விரதம் கண்டிப்பாக அனுசரிக்க வேண்டும்.

சில பெண்கள் புகுந்த வீட்டில் வழக்கமில்லாமலிருந்தாலும் பிறந்த வீட்டிலிருந்து நோன்பு எடுத்து வரும் பழக்கம் உள்ளது.

ஆனால் இரண்டு பக்கமும் இப்பண்டிகை கொண்டாடும் வழக்கமில்லாமலிருந்தால் தாம் மட்டும் நோன்பு எடுக்கும் வழக்கம் அவ்வளவாகத் தமிழ் நாட்டில் இல்லை.

உறவினர்கள் வீட்டில் பண்டிகையில் கலந்து கொண்டு பூஜையில் பங்கேற்கலாம்.

புகுந்த வீட்டில் வரலட்சுமி விரதம் கொண்டாடும் பழக்கமுள்ள வீடுகளில் திருமணம் முடித்த கையோடு இப்பண்டிகைக்கு முன்பாக,

அம்மனின் திருமுகம், காதோலை, கருகமணியுடன் கூடிய நகைகள் பிறந்த வீட்டுச் சீராக வாங்கித் தருவது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் பண்டிகைக்கு முதல் நாள் அம்மனை அழைத்து மறுநாள் பூஜை செய்து நோன்பு செய்து ஆராதனை செய்ய வேண்டும்.

மஹா நிவேத்யம்

நிவேதனங்களாக மஹா நிவேத்யம் எனப்படும் அன்னம் பருப்பு வடை, பாயஸம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளும் அளிக்கப்படுகின்றன.

பின்பு நோன்புச் சரடிற்குத் தனியே பூஜை செய்து நோன்பு எடுத்ததின் அடையாளமாக,

வலது மணிக்கட்டில் சரடைக் கட்டிக் கொள்வதோடு பூஜை முடிகிறது. நாள் முழுவதும் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தால் நல்லது.

மாலையில் பால் பழம் நிவேதனம் செய்து இரவு தொடங்கும் நேரம் தீபத்தை சாந்தி செய்யலாம்.

மறுநாள் சனிக்கிழமையன்று புனர் பூஜை என்கின்ற பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்த சுண்டல் முதலியவற்றைக் கொடுப்பது வழக்கம்.

அம்மன் மனம் குளிர பாட்டுக்கள் பாடி அரிசி வைக்கும் பாத்திரத்தை பூஜை செய்த இடத்திற்கு அருகாக வைத்து ஆரத்தி எடுத்த பின்பு,

அம்மனை மெதுவாக அந்த அரிசியுடன் கூடிய பாத்திரத்தில் வைத்து மூடி வைப்பார்கள்.

நம் வரவேற்பையும் ஆராதனைகளையும் ஏற்ற திருமகள் நம்முடன் தங்குவதாக ஒரு ஐதீகம் அல்லது நம்பிக்கை. (மகிழ்ச்சியுடன் புகுந்த வீடு அனுப்பி வைப்பதாகவும் கொள்ளலாம்).

இந்த விரதத்தை கடைபிடித்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியமும், நமது வீட்டில் லட்சுமியும் வாசம் செய்வாள் என்று நம்பப்படுகிறது.

தகவல்கள்: மித்ரா