வைகோ…உண்மை போராளி…

265
1190
வைகோ...உண்மை போராளி...
Advertisement

வைகோ…உண்மை போராளி…

Advertisement

வையாபுரி கோபால்சாமி தமிழக அரசியலில் கீழ்மட்டத்தில் இருந்து உச்சம் தொட்ட உன்னத உழைப்பாளி. வைகோ…உண்மை போராளி…

திமுக வில் அடிப்படை பொருப்பில் இருந்நது கொள்கைபரப்பு வரை கடின உழைப்பில் கட்சியில் உயர்ந்தவர். கலிங்கப்பட்டி பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை பதவி பார்த்தவர்.

ஓர் ஊழல் குற்றசாட்டும் இல்லா நேர்மையாளர். கொலை குற்றம்சாட்டும் வரை கொண்ட தலைமைக்கு வழிமாறா விசுவாசி. தனிக்கட்சி தொடங்கி வெற்றிகரமாக ஆரம்பத்தை கண்டார்.

தனது கட்சி மத்தியில் மந்திரிகளை பெற்றார்.தனது வந்த பதவியை வேண்டாமென ஒதுக்கிதள்ளினார்.

பதவியும்,பணமும் மட்டுமே இன்றைய அரசியல் என்ற யாதார்த்தத்தை புரிந்துகொண்டாலும் பொதுவாழ்வில் நேர்மையை முக்கியம் என்று தடம்மாறாது பயணித்தார்.

இன்றைய இணைய அரசியல் விமர்சனத்தில் வைகோவை காமெடியாக சித்திரிக்கும் கொடுமை நடந்து வருகிறது.

இத்தனைக்கும் மேலாக, ஈழ போராட்டத்தில் எடுத்த முடிவில் இன்றுவரை இம்மியளவு ௯ட தடம்மாறா உண்மை போராளி. தடா,பொடா என எதுவரினும் கவலைப்படாதவர்.

ராஜூவ் கொலை காலத்தில் கலர்மாறிய பலருக்கு மத்தியில் நேற்றும்,இன்றும் நாளையும் புலிகளை ஆதரிப்பேன் என்று சொல்லும் உண்மை போராளி.

நடைபயணம், சிறைபயணம் எல்லாம் கொண்ட கொள்கைக்கே என்று இன்றுவரை வாழும்…இப்போதும் சிறையில் இருக்கும் அந்த உண்மையான புலிபோராளி கண்டு இந்நாளில் பெருமை கொள்கிறது தமிழ்செய்தி…