நாடு முழுதும் உருது மொழி வேண்டும் : ஹமித் அன்சாரி..!

28
547
நாடு முழுதும் உருது மொழி வேண்டும் : ஹமித் அன்சாரி..!
Advertisement

நாடு முழுதும் உருது மொழி வேண்டும் : ஹமித் அன்சாரி..!

Advertisement

” உருது மொழி முஸ்லிகள் மட்டும் பேசும் மொழி அல்ல. நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று,” என,

முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த உருது மொழிக்கான இணையதள துவக்க விழாவில் ஹமித் அன்சாரி பேசியதாவது:

உருது மொழி என்பது முஸ்லிம் மக்கள் மட்டும் பேசும் மொழி அல்ல. நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று.

ஆனால், உருது மொழியை அரசியல் பிரச்னையாக்கி விட்டனர்.

முஸ்லிம் மக்களுக்கு மட்டுமானது உருது மொழி என்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டனர்.

தென் மாநிலங்கள், மேற்கு வங்கம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உருது மொழி பேசும் மக்களை எளிதில் அடையாளம் காண முடியும்.

கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உருது மொழி பேசும் மக்கள் உள்ளனர்.

அன்றாட வாழ்க்கைக்கு உருது மொழி முக்கியமில்லை என்று சிலர் நினைக்கின்றனர்.

ஆனால், அதற்காக அந்த மொழியை கற்க கூடாது என எந்த தடையும் இல்லை. இது தான் உருது மொழிக்கு உள்ள மிகப்பெரிய தடை.

எனினும், மற்ற மொழிகளை விட உருது மொழியில் தெளிவாக கூறவும், விளக்கவும் முடியும் என்று கூறியுள்ளார்.