இரட்டை இலை அதிமுகவுக்கே: டில்லி ஐகோர்ட் தீர்ப்பு..!

0
112
இரட்டை இலை அதிமுகவுக்கே: டில்லி ஐகோர்ட் தீர்ப்பு..!
Advertisement
Advertisement

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க., இரண்டாகப் பிரிந்தது. அப்போது, இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரி,

சசிகலாவின் அக்கா மகன் தினகரன் சார்பில், தேர்தல் கமிஷனில் மனு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அணிகள் இணைந்தன.

அதையடுத்து, இ.பி.எஸ்., – ஓ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க.,வுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், தினகரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், இன்று (பிப்.,28) தீர்ப்பு வழங்கிய டில்லி ஐகோர்ட், இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கியது செல்லும்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சரியானது என உத்தரவிட்டு தினகரன் மனுவை தள்ளுபடி செய்தது.