விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி..!

26
575
விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி..!
Advertisement

விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி..!

Advertisement

மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக விவசாயிகள், அவர்கள் விளைவிக்கும் பயிர்களுக்கு அதிக விலை கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி..!

மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுபோல்,

தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதன்மைப்படுத்தி தொடர்ச்சியாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் அதிகரித்து வந்தது.

இந்நிலையில், இன்று நடந்த விவசாயிகள் போராட்டத்தில், வன்முறை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இரண்டு விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

மேலும், நான்கு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பால் மற்றும் காய்கறி கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

விவசாயிகள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசம் மட்டுமன்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.