தினகரன் கட்சி…. ஜாதி கட்சி..! அக்னீஸ்வரன் அலறல்…!

0
131
தினகரன் கட்சி.... ஜாதி கட்சி..! அக்னீஸ்வரன் அலறல்...!
Advertisement
Advertisement

அ.ம.மு.கவைத் துறந்து சமீபத்தில் வெளிவந்த, அதன் செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான, அக்னீஸ்வரன் தனது உருக்கமான பேட்டியில்,

ஏதோ புதியதாக கண்டுபிடித்தது போல் மனம் நொந்து பேசியதாவது

“தினகரன் தனது கட்சியை துவங்கியபோது இருந்தது போல், இன்று  இல்லை. கட்சியில் உரிய மரியாதை இல்லை.

தொண்டர்கள் மற்றும் தலைவர்களை அலட்சியமாக நடத்தியதால் தான், செந்தில் பாலாஜி, நாஞ்சில் சம்பத் ஆகியோர், கட்சியில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தினகரனின் பேச்சு, வெறும் பேச்சாக மட்டுமே உள்ளது. மக்களுக்காக எந்தத் திட்டமும், அவரிடம் இல்லை.

தினகரனுக்கு ஆதரவு கொடுத்தவர்களின், எம்.எல்.ஏ., பதவி பறிபோய் உள்ளது. ஆனால், அவர் மட்டும், எம்.எல்.ஏ., பதவியில் உள்ளார்…என்று தனது வயிற்றெரிச்சலை கொட்டியதோடு,

தினகரன் ஜாதியை முன்னிலைப்படுத்தி,  கட்சியை நடத்துகிறார் என்று அலறிக் கொட்டித்தீர்த்தார்….!

மிஸ்டர் அக்னீஸ்…. சமீபத்தில் நமது “அரசியல் கண்ணாடி” செய்தியாளர்களின் குழு எடுத்த தமிழக வாக்கு சர்வேயில்,

தாங்கள் கூறியது போல் அல்ல அதில் ஒரு சின்னத் திருத்தம்… கள்ளர், மறவர், அகமுடையோர் எனும் முக்குலத்தோர்களில் பெரும் பகுதி மக்கள் தினகரன் தலமைதான் சிறப்பானதாக ஏற்க்கத் தயாராக இருக்கிறார்கள்… என்பதாகும்…!

மேலும் உங்களைப் போன்று விரக்தி  நிலையில் இருப்பவர்களின் அனுமானம், தினகரன் கட்சியை இப்படி ஜாதி சான்றிதழ் தருவது இயல்பு என்பதை மக்கள் நன்கு அறிந்த ஒன்று தானே….!