டிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்..!

டிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப்..!
Advertisement
Advertisement

மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) டிடிஹெச் கேபிள் பயனர்கள் அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

புதிய செயயலியை கொண்டு பயனர்கள் அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து,

அவற்றுக்காண கட்டண விவரங்களையும் அறிந்து கொள்ளலாம் என்று டிராய்  அறிவித்துள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் எந்த சேனலுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்தலாம் என்று அறிந்தும், பிரியமான சேல்களையும் இனி கண்டு கழிக்கலாம்.

மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தொலைபேசி நிறுவனம், கேபிள், டிடிஹெச் உள்ளிட்டவைகளை ஒழுங்குப்படுத்தி வருகின்றது.

மேலும், இந்த துறைகளில் நடக்கும் குற்றங்களை களையவும் டிராய் உதவுகின்றது.

டிராய் உருவாக்கி இருக்கும் பிரத்யேக வலைதளத்தில் ஐந்து வழிமுறைகளை கடந்து, அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து கொள்ள முடியும்.

இந்த சேவைகளை கொண்டு விரும்பிய சேனல்களை தேர்வு செய்வதோடு அவற்றுக்கான கட்டணங்களையும் அறிந்து கொள்ள முடியும்

புதிய வலைதளத்தில் வீரும்பி சேனல்களை தேர்வு செய்ய வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், வசிக்கும் மாநிலம், விரும்பிய சேனல் வகை, அதன் பின் திரையில் சேனல்கள் பட்டியிலிடப்பட்டு இருக்கும்.

பயனர்கள் அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து மாதாந்திர கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

விரும்ப சேனல்களுக்கு ஏற்ற கட்டண சேனல்களுக்கு நீங்கள் செலுத்தும் கட்டணம், ஜிஎஸ்டி, வரி மற்றும் டிடிஹெச் கட்டணம் உள்ளிட்டவை தனித்தனியே பட்டியலிடப்பட்டிருக்கும்.

அதன்படி விரும்ப சேனல்களை தேர்வு செய்து மாத கட்டணத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

மொத்தமாக மாதாந்திர அடிப்படையில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை இடம்பெற்றிருக்கும்.

புதிய விதிமுறையின் படி இலவச சேனல்களை கட்டாயம் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சேனல் செலக்டர் வலைதளத்தில் ஹெச்டி மற்றும் எஸ்டி சேனல்களை, சேனல் வகைகைள், ஒளிபரப்பும் நிறுவனம் மற்றும் மொழி உள்ளிட்டவற்றை தேர்வு செய்யலாம்.

புதிய விதிமுறையின் சேனல் கட்டணம் ரூ.130. ஜிஎஸ்டி உட்பட சேர்த்து ரூ.153.40 மேலும், வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கு கட்டணம் தனி.