கார்பொரேட் நிறுவன பிளாஸ்டிக்கிற்கு தடைகோரி வியாபாரிகள் போராட்டம்..!

கார்பொரேட் நிறுவன பிளாஸ்டிக்கிற்கு தடைகோரி வியாபாரிகள் போராட்டம்..!
Advertisement
Advertisement

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் தூத்துக்குடி நகர மத்திய வியாபாரிகள் சங்கத்தினர்  இன்று போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.கார்பொரேட் நிறுவன பிளாஸ்டிக்கிற்கு தடைகோரி வியாபாரிகள் போராட்டம்..!

தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வெளியே இருந்து வரும் பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளுக்கு இங்கே அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களில் உள்ள பிளாஸ்டிக்களை ஒழிக்காமல்,

உள்நாட்டு தயாரிப்புகளில் உள்ள பிளாஸ்டிக்களுக்கு மட்டும் தடைவிதித்து உள்நாட்டு வியாபாரிகளை அச்சுறுத்தும் தமிழக அரசை கண்டிப்பதாகவும்,

அன்னிய வெளிநாட்டு பொருட்களை தடைசெய்ய கோரியும், உள்நாட்டு வணிகத்தை மேம்படுத்த வலியுறுத்தியும்,

அன்னிய பொருட்களை தீயிட்டு கொளுத்தி நூதன போராட்டத்தை அச்சங்க அலுவலகம் முன்பு நடத்தினர். இதில் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.