உடற்பயிற்சி அதிகாரிக்கான விண்ணப்பம் வரவேற்பு..!!

உடற்பயிற்சி அதிகாரிக்கான விண்ணப்பம் வரவேற்பு..!!
Advertisement
Advertisement

ஹாஸ்டல் மேற்பார்வையாளர் மற்றும் உடற்பயிற்சி அதிகாரி பணியிடங்களுக்கு ஜனவரி 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வரும் ஜனவரி 30ஆம் தேதி வரை ஆன் லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்தப் பணியிடங்கள் அனைத்தும் நேரடி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. முதலில் எழுத்துத் தேர்வு பின்னர் நேரடி தேர்வு நடத்தப்படும்.

இந்தப் பணிக்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் ஒன்று மாற்றுத் திறனாளிகளுக்கானது.

பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாத வருமானம் ரூ. 35,000த்தில் இருந்து ரூ. 1,12,400 (லெவல் 11) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்கள் இறுதி நேர மாறுதலுக்கு உள்ளானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 150 செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். ஒருவர் ஒரு முறை தான் பதிவு செய்ய முடியும்.

தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி தேதி பிப்ரவரி 2 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தாள் தேர்வு ஏப்ரல் 27ஆம் தேதி காலையும், இரண்டாம் தாள் தேர்வு மதியமும் நடைபெறுகிறது.

இதுகுறித்த முழு விவரங்கள் தெரிந்து கொள்ள அரசு இணையதளத்திற்கு சென்றால் அறிந்து கொள்ளலாம்.

அதற்கான இணையதள முகவரி இங்கே வழங்கப்பட்டுள்ளது.  2019_02_notifyn_Hostel_Superintendent

சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி தேர்வு, கவுன்சிலிங் குறித்த தேதிகள் தேர்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படாது.

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேற்குறித்த தகவல்கள் எஸ்எம்எஸ் மூலம் தேர்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.