இன்றுடன் நிறைவு பெறும் 2வது உலக முதலீட்டாளர் மாநாடு..!

இன்றுடன் நிறைவு பெறும் 2வது உலக முதலீட்டாளர் மாநாடு..!
Advertisement
Advertisement

சென்னையில் இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் 2ம் நாள் மற்றும் இறுதி நாள் விழா இன்று நடைபெறுகிறது.

நேற்று நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில், சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

அதை தொடர்ந்து தமிழகத்திற்கான வானூர்தி மற்றும் ராணுவத் தளவாடக் கொள்கைகள் வெளியிடப்பட்டன.

அதன்படி வானூர்தி கொள்கையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரூ. 71,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.

’ஏரோஸ்பேஸ்’ கொள்கை மூலம் போர் உபகரணங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டமைக்கப்படவுள்ளன.

இதில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மேலும், காட்டுப்பள்ளி துறைமுகத்தின் விரிவாக்க பணிகளுக்காக ரூ. 15,000 கோடியை அதானி குழுமம் முதலீடு செய்யவுள்ளது.

ரூ. 500 கோடி முதலீட்டில் டிவிஎஸ் லூகாஸ் நிறுவனம் தனது தொழில்துறையை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இயங்கும் ‘நைக்’ காலனிகள் ஆலை ரூ. 500 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

திருப்பெரும்புதூரில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களுக்கான மருத்துவச் செலவும் குறையும்.

இதுபோன்ற பல சிறப்பம்சங்கள் நேற்றைய நிகழ்வில் அறிவிக்கப்பட்டன.

இன்று நடைபெறும் இரண்டாவது மற்றும் இறுதி நாள் நிகழ்விலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி நேற்று வெளியான அறிவிப்புகளில் எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன என்பது தொடர்பான விவரங்கள் இன்று தெரியவரவுள்ளது.

இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் கையெழுத்திடும் நிகழ்வில், சுமார் 900 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும்,

அதன்மூலம் தமிழகத்தில் முதலீடு செய்யப்படும் பண மதிப்பு குறித்து தெரியவரும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கவுள்ளார்.

தொடர்ந்து இன்றும் தொழில்துறை சார்ந்த முக்கிய கருத்தரங்குகள் பல நடைபெறவுள்ளன.