தமிழக பட்ஜெட் 2019 லைவ் அப்டேட்..!

தமிழக பட்ஜெட் 2019 லைவ் அப்டேட்
Advertisement
Advertisement

2019-20ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக சட்டப்பேரவையில் இன்று தொடங்குகிறது. நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

பட்ஜெட் அப்டேட்ஸ்…!

2016ஆம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்ற பின், நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இது. 2017ஆம் ஆண்டு மட்டும் அப்போதைய நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தார். ஓட்டுமொத்தமாக 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ஓ.பி.எஸ்.

பட்ஜெட் உரையைத் தொடங்கினார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

மாநிலத்தின் வருவாயில் 51.85% சேவைத்துறையின் பங்களிப்பு உள்ளது.

மாநில பொருளாதார வளர்ச்சி 8.1% ஆக இருக்கும்.

தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ. 44,176 கோடியாக இருக்கும்.

வருவாய் பற்றாக்குறை ரூ.19319 கோடி என்பதிலிருந்து ரூ.14,315 கோடி ஆக குறையும்.

தமிழகத்இல் தனிநபரின் ஆண்டு வருமானம் 1,42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சுகாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய்.

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் 1 லட்சம் வீடுகள் கட்ட 1,700 கோடி ரூபாய்

சென்னையில் நிலத்தடியில் வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்த ரூ.2000 கோடி திட்டம். 2 லட்சம் நான்கு சக்கர வாகனங்களும் 4 லட்சம் இரு சக்கர வாகனங்களும் நிறுத்தலாம்.

விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம். விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை. நிரந்தர ஊனத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம். இத்திட்டத்துக்கு 250 கோடி ரூபாய்.

வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ.1031.53 கோடி.

வீட்டு வசதித்துறைக்கு ரூ. 6265.25 கோடி

சமூகப் பாதுகாப்புத் துறைக்கு ரூ.3,958 கோடி

திருமங்கலத்தைக் தலைமையிடமாகக் கொண்டு கள்ளக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய வருவாய் கோட்டம்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரத்தூர் அடையாற்றில் நீர்த்தேக்கம்.

தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.54.76 கோடி

2 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.1361 கோடி

பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 621.59 கோடி

வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்துக்கு ரூ. 172 கோடி ஒதுக்கீடு.128 வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம், 360 கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்கப்படும்.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 28,757.62 கோடி

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ. 13,605,19 கோடி.

ரூ.100 கோடி செலவில் உழவர் உறபத்தியாளர் அமைப்பு.

ரூ.1,1342 கோடி செலவில் 1,986 கி.மீ. நீள சாலை சீரமைப்புப் பணிகள்.

அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேள்ணாமை சான்று வழங்கும் மையங்கள் அமைக்கப்படும்.

இயற்கை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கு 79.73 கோடி ரூபாய்.

பயிர்க்கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூ.200 கோடி.

உலக வங்கி கடன் உதவியுடன் ரூபாய் 2685.91 கோடி மதிப்பில் தமிழ்நாடு சுகாதாரச் சீரமைப்புத் திட்டம்

உயர்கல்வித்துறைக்கு ரூ.4581.21 கோடி

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ரூ.100 கோடி நித உதவி

மரபுத் திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளைக் கொண்டு 100 கோடி செலவில் உறைவிந்து உற்பத்தி நிலையம்.

மொத்தம் 2000 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்; சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்

திருவொற்றியூர் – விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் 2020 ஜூனுக்குள் பயன்பாட்டுக்கு வரும் .

அத்திக்கடவு  அவினாசி திட்டம் விரைவில் தொடங்கும். ரூ.1000 கோடி ஒதுக்கீடு. இத்திட்டத்தின் பயன்பாட்டுக்கு ரூ. 132.80 கோடி சூரிய ஒளி மின்திட்டம்.

நீர்நிலைகளை பொதுமக்கள் பங்களிப்புடன் புணரமைக்கும் குடிமராமத்துத் திட்டத்துக்கு ரூ.300 கோடி.

சுகாதாரத்துறைக்கு 12,563 கோடி

ரூ. 420 கோடி செலவில் சூரிய மின் வசதியுடன் 20,000 பசுமை வீடுகள் கட்டப்படும்.

சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை 1546 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ18,700 கோடி.

2030க்குள் அனைவருக்கும் வீட்டுவசதி கிடைக்கும் வகையில் நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் குடியிருப்பு கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

அரவக்குறிச்சி உள்ளிட் இடங்களில் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு 1558.87 கோடி

நகர்ப்புற ஏழைகளுக்கு வீட்டுவசதி வழங்கும் திட்டத்துக்கு ரூ.5000 கோடி

சிறப்புத் திட்டம் மூலம் ஆதி திராவிடர் வீடுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி

மாற்றுத்திறனாளிகளுக்கு 3000 சிறப்பு சக்கர நாற்காலிகளும் 3000 பெட்ரோல் ஸ்கூட்டர்களும் வழங்கப்படும்.

பால்வளத்துறைக்கு ரூ. 758.45 கோடி

தமிழக அரசு ரூ.51,800 கோடி கடன் வாங்க வரம்பு. 43,000 கோடி நிகரக் கடன் வாங்க திட்டம்.

மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் நீட்டிக்க ஆயத்தப் பணிகள்

எரிசக்தித் துறைக்கு ரூ. 18560.77 கோடி

ரூ. 20,196 கோடி வழங்க ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல்

சென்னை மெட்ரோ திட்ட 2ஆம் கட்டத்தில் 118.90 கி.மீ. தொலைவுக்கு 2 மெட்ரோ வழித்தடங்கள். மெட்ரோ சேவை 172.91 கி.மீ. தொலைவாக அதிகரிக்கும்.

அரசு தனியார் உதவியுடன் 5 மாவட்டங்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பொறியில் மாணவர்களுக்கு உயர்நிலை தொழில்நுட்பப் பயிற்சி. திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.200 கோடி

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ. 2681 கோடி

திருமுடிவாக்கம், ஆலந்தூர் தொழிற்பேட்டைகள் விரிவாக்கப்படும். தொழிற்பேட்டைகளில் இயங்கும் நிறுவனங்களுக்கு தனியாக தொழில் மின்பாதை அமைக்கப்படும்.

ஹார்வர்டு பல்கலைக்கழகம் போல் பிற பல்கலைகழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும்

சுற்றுலாத் தலங்களில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி.

விவசாயத்துறைக்கு ரூ.10,550 கோடி ஒதுக்கீடு

பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பெண்குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டத்திற்கு ரூ.47.7 கோடி ஒதுக்கீடு

ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கல்லூரி அமைக்கப்படும்

சாதாரண நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.1,800, சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,830 வழங்கப்படும்

2019-20இல் நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்காக ரூ.180 கோடி ஒதுக்கீடு

10 குதிரைத்திறன் கொண்ட சூரிய சக்தியில் இயங்கும் 2000 பம்புசெட்டுகள் 90 சதவீத மானியத்துடன் வழங்கப்படும்

ஆழ்கடல் மீனவர்களின் தொலைத் தொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படும் ; 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொடர்பு கருவிகள் வழங்கப்படும்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை , சித்திக் குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளது.

காவல் துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு 111.57 கோடி ரூபாய்

சூரியசக்தியால் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் மூலம் நீர் மேலாண்மை திட்டம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.50 கோடி

ரூ.10,000 கோடி பயிர்கடன் வழங்க திட்டம்

வெள்ளப்ப்பளம், தரங்கம்பாடி, திருவொற்றியூர் குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.420 கோடி

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வர்த்தக மற்றும் முதலீட்டு மையம் அமைக்கப்படும்.

2019-20ஆம் ஆண்டில் அரசின் வருவாய் ரூ.1,97,117 கோடியாக இருக்கும்.

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விச் செலவை திரும்ப வழங்கும் திட்டத்துக்கு 460.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மின்சாரத் துறைக்கு ரூ.18,560.77 கோடி. ரூ.2350 கோடி செலவில் 500 மெ.வா சூரிய மின்சக்தி திட்டம்.

மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியத்துக்கு ரூ.100 கோடி

சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை ரூ.3,958 கோடி

சென்னை தவிர்த்து இதர நகரங்களில் வீட்டு வசதியை உருவாக்க 5000 கோடி மதிப்பில் ஆசிய வங்கியில் கடன் கோரப்பட்டுள்ளது .

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 7,896ல் இருந்து 5,198ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது எனத் தகவல்

மாணவ மாணவிகளுக்கு பேருந்து பயணச் சீட்டு வழங்க ரூ. 766 கோடி. பெட்ரோல் மானியத்துக்கு 250 கோடி. போக்குவரத்துத் துறைக்கு 1297.83 கோடி

ரூ. 1125 கோடி செலவில் தேனி, சேலம் ஈரோடு மாவட்டங்களில் 250 மெ.வா. திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டம்

சாகுபடிக்குப் பயன்படாத, சமுதாய மற்றும் பட்டா நிலங்களில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டம் செயல்படுத்தப்படும்.

காவல்துறைக்கு ரூ.8084.80 கோடி

5000 ஒருங்கிணைந்த பண்ணை அலகுகள் அமைக்க 101.62 கோடி ரூபாய்.

முதலீடுகளுக்கு 2500 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க இலக்கு. கடந்த ஆண்டைக் காட்டிலும் 500 கோடி அதிகம்