பிணம் தின்னும் மனிதனால் திருநெல்வேலி மக்கள் அதிர்ச்சி..!

0
107
பிணம் தின்னும் மனிதனால் திருநெல்வேலி மக்கள் அதிர்ச்சி..!
Advertisement
Advertisement

திருநெல்வேலியில் ,பிணம் தின்னும் மனிதனை , ஊர் மக்களே பிடித்து காவல்துறையினரிடம்ஒப்படைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து கிராம மக்களின் உதவியால் அவர் மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

திருநெல்வேலியில் உள்ள வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகேஷன். 50 வயதாகும் முருகேஷன் தினக் கூலியாக வேலை செய்து வருகிறார்.

இவருக்க இறந்துபோனவர்களின் பிணத்தை உண்ணும் வினோத பழக்கம் உள்ளது.

கிரமத்தில் உள்ள சுடுகாட்டில்சில மாதங்களாகஎரிக்கப்பட்ட பிணங்களின் பாகங்கள் சிதறிக்கிடப்பதை கிராம மக்கள் பார்த்துள்ளனர். ஆனால் நாய்கள்தான் இப்படி செய்திருக்கும் என்று முதலில் அதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டனர்.

சிலருக்கு மட்டும் முருகேஷன் மீது சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் கிரமத்தில் வயதான பெண் ஒருவரின் இறுதிச்சங்கு நடைபெற்றது.

ஊர் மக்கள் அனைவரும் வயதான பெண்ணின் உடலை எரித்துவிட்டு , அவரவர் வீட்டுக்கு செல்வதுபோல நடித்தனர். அனைவரும் சுகாட்டுக்கு சற்று தொலைவில் மறைந்திருந்தனர்.

நள்ளிரவு 1.30 மணிக்கு சுடுகாட்டுக்கு வந்த முருகேஷன் கதிர்களை அறுக்கும் அரிவாளை எடுத்து வந்தார்.

எரிந்த மூதாட்டியின் உடல் பாகங்களை வெட்டி எடுத்து ,தின்னத் தொங்கினார். இதைபார்த்து அதிர்ந்துபோன கிராம மக்கள், முருகேஷன் மீது கற்களை எரிந்தனர்.

அதை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பிணத்தை தின்று கொண்டிருந்தார் முருகேஷன் .

இதைத்தொடர்ந்து அவனை பிடித்த ஊர்மக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் கிராம மக்கள் வழங்கிய சிறுதொகையில் முருகேஷனை காவல்துறையினர் சென்னை கீழ்பாக்கம் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.