நல்ல மருந்து…..! நம்ம நாட்டு மருந்து….! சங்கரமூர்த்தியின் மருத்துவ சிந்தனைகள்…! பகுதி 5

41
1191
நல்ல மருந்து…..! நம்ம நாட்டு மருந்து….! சங்கரமூர்த்தியின் மருத்துவ சிந்தனைகள்…! பகுதி 5
Advertisement

நல்ல மருந்து…..! நம்ம நாட்டு மருந்து….! சங்கரமூர்த்தியின் மருத்துவ சிந்தனைகள்…! பகுதி 5

Advertisement

தொட்டாற்சிணுங்கி நல்ல மருந்து…..! நம்ம நாட்டு மருந்து….! சங்கரமூர்த்தியின் மருத்துவ சிந்தனைகள்…! பகுதி 5

தொட்டாற் சுருங்கி வேரை பஞ்சு போலத் தட்டி அதனை ஒரு மண்சட்டியில் போட்டு அத்துடன் நீரைச் சேர்த்து பாதியாகச் சுண்டும் வரை,

கொதிக்க வைத்து அந்த நீரை தினந்தோறும் மூன்று வேளை 50 மில்லி அளவுக்கு குடித்து வந்தால் நீர்க்கடுப்பு , கல் அடைப்பு  முற்றிலும் குணமாகும்.

தொட்டாற் சுருங்கி இலையை அரைத்து தினமும் தயிரில் கலந்து குடித்து வந்தால் சூட்டால் உண்டாகும் நீர்க்கடுப்புப் பிரச்சனை  முற்றிலும் குணமாகும்.

தொட்டாற் சுருங்கி வேரையும் இலையையும் சம அளவு எடுத்து காயவைத்து உலர்த்தி பொடி செய்து சூரணமாக வைத்துக்கொண்டு,

தினந்தோறும் 10 முதல் 15 கிராம் பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் மூலச்சூடு தொடர்பான நோய்கள் குணமாகும்.

தொட்டாற் சுருங்கி இலையை விழுதாக அரைத்து பற்றுப் போட்டு வந்தால் வாதம் தொடர்பான கைகால் மூட்டுகளின் வலி, வீக்கம் குணமாகும்.

                                        

இதன் இலைகளை வெந்நீருடன் போட்டு கொதிக்க வைத்து ஊற்றி குளித்து வந்தால் இடுப்பு, முதுகு வலியும் குணமாகும்.

தொட்டாற்சிணுங்கி வேரை நன்கு அலசி வெயிலில் உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக்கொள்ள வேண்டும்.

இதேபோல், தொட்டாற்சிணுங்கி இலைகளையும் இடித்துச் சூரணமாக்கி இரண்டையும் சம அளவுக்கு கலந்து கொள்ளவும்.

இந்த சூரணத்தை ஒரு ஸ்பூன் அளவு எடுத்துத் தண்ணீரில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால், சர்க்கரை நோயில் இருந்து மீள முடியும்.

ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் தொட்டாற் சுருங்கி  இலையை அரைத்து (15 கிராம்) அளவுக்கு எடுத்து பாலில் கலந்து சாப்பிடவேண்டும்.

தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

தகவல்கள்: சங்கரமூர்த்தி, 7373141119