போதகர் படுகொலை – பாதியில் நிறுத்தப்பட்ட ஜெபக்கூட்டம்

34
879
போதகர் படுகொலை
Advertisement
Advertisement

தூத்துக்குடி மதபோதகர்  கனகராஜ் மரணம் மறைக்க பட்டு அதன் பிறகு அது படுகொலை என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த பரபரப்பான கொலை வழக்கு இந்திய கிருஸ்துவ விசுவாசிகளிடையே பெரும் அதிர்வலையை உருவாக்கி வருகிறது காரணம் இன்று வரை உண்மை கொலைகாரன் யார் என்று தெரிவிக்கப்படாமல் இருப்பது தான்.

வெளி ஆட்கள் யாரும் எளிதில் உள்ளே நுழைய  முடியாத தேவாலயத்தில் நடந்த இந்த பயங்கர கொலைக்கான காரணத்தை கண்டறிந்து கொள்வதில் அணைத்து தரப்பு மக்களும் ஆத்திரத்துடன் உள்ளனர்.

இதன் வெளிப்பாடாக நேற்று (27.11.2016) நடைபெற வேண்டிய ஜெபக்கூட்டம் பெரும் கலவரத்தில் முடிந்தது.

whatsapp-image-2016-11-28-at-11-00-08-am

போதகர் கனகரஜ் கொலையின் மர்ம முடிச்சுகளை கண்டறியும் போலீஸ் உளவு துறை பிரிவுக்கு கிடைக்கும் தகவல் களின் அடிப்படையில் பலமான 5 தனிபடை அமைக்கப்பட்டு பலமுனைகளில் பலரையும் விசாரணை வலைக்குள் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்

அதில் யாகுபு என்பவரை போலீசார் விசாரித்தனர் இது அவரின் தந்தைக்கு அவமானமாகிவிட்டதாம்.

இதனால் அவர் நேற்று (27.11.2016) கூடிய ஜெபக்கூட்டத்தில்

“நங்கள் இந்து மதத்தில் இருந்து ஏசுவால் இரட்ச்சிக்கப்பட்டு கிருஸ்துவை தழுவியவர்கள், அப்படிப்பட்ட எங்கள் மகன் மீது சந்தேகப்படுவது நியாயமா? உண்மை கொலைகாரன் ஊரை சுற்றிக் கொண்டு சுகவாசியாக மடத்துக்குள்ளே இருக்க என் மகனை பழிப்பது தர்மா?”… என்று கண்ணீர் விட்டு கதறிவிட்டார்.

இதை கண்டுட விசுவாசிகள் ஜெபத்தை புறக்கணித்தால் அங்கு பெரும் கலவரம் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியது.

அதை தொடர்ந்து அங்கு நேற்று போலீஸ் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கெண்டு வந்தனர்.

ஒட்டு மொத்த தூத்துகுடி சபை விசுவாசிகள்அணைவரும் உதவி போதகர் ஜான்தாமஸ் மீது சந்தேகம் கொண்டுள்ளனர்.

img-20161110-wa0009

எனவே அவர் மீது ஏன் விசாரணை நடத்த வில்லை (போலீஸ்சார் அவரிடமும் விசாரணை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்) சந்தேகப்படும் நபர்கள் யாராக இருந்தாலும் மடத்தில் இருக்க கூடாது என்றும்,

இன்று(28.11.2016) ஒரு முடிவு தெரிய வேண்டும் என்றும் நேற்று தலைமை பேதகரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு கூட்டம் கலைந்து சென்றது.
 
இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க தூத்துக்குடியே பெரும் ஆவலாக காத்திருக்கிறது என்று ஒரு சமூக ஆர்வலர் நமது செய்தியாளரிடம் கூறினார்

நாம் அவரிடம் ஜான் தாமஸ் மீது ஏன் அனைவருக்கும் சந்தேகம் என்று கேட்ட போது அதற்கு அவர்

போதகர் மரணம் ஆரம்பத்திலிருந்தே சந்தேகத்தை உருவாக்கி விட்டது. இது தான் வெளிப்படையான உண்மை.

மேலும் அவர்களின் திருச்பையை சேர்ந்த வழக்கறிஞர் அதிசயகுமாரின் வாதங்கள் மேலும் வலிமை சேர்பபதாக உள்ளது என்றார் அவர்.

அதிசயகுமாரின் சந்தேக வாதங்களை மீண்டும் ஒரு முறை வாசகர்களுக்காக…

பாஸ்டர் கனகராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி பாஸ்டர் ஜான் தாமஸ்  ?

img-20161103-wa0012           பாஸ்டர் கனகராஜ் கடந்த 5.10.2016 அன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தை உறுதி செய்து வெளியிட்டது பாஸ்டர் ஜான் தாமஸ்.

இந்த ஜான் தாமஸ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி பாஸ்டராக நியமிக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் த  பெந்தேகோஸ்தே  சபையில் பாஸ்டர் கனகராஜிக்கு அடுத்த பதவியில் இருந்தவர் பாஸ்டர் ஜான் தாமஸ்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றம் செய்வதற்கு முன்பாக ஜான் தாமஸ் நாகர்கோவில், பெங்களூர், சென்னை மற்றும் பல முக்கிய நகரங்களில் துறவறப்பணி ஆற்றியுள்ளார்.

அவர் பணியாற்றிய சபைகளில் எல்லாம் இவர் பிரச்சினையுடன் தான்  மாற்றமாகி வந்துள்ளதாக அப்பகுதியின் சபை விசுவாசிகளால் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக பெங்களூரில் பணியாற்றிய போது பெங்களூரைச் சார்ந்த விசுவாசிகள் இவரை குறித்து எனக்கு அலைபேசியில் பல விதமாக கூறி வருகின்றார்கள்.

இவ்வாறு பல விமர்சனத்துக்கு ஆளான இவர் தூத்துக்குடிக்கு மாறுதலாகி வந்த பின்பு பாஸ்டர் கனகராஜ் உடன் நெருங்கிய  அன்புடனும் பாசத்துடனும் ஊழியத்தில் இருந்ததாக இவரைப் பற்றி நல்ல சாட்சி கூறவில்லை.

பாஸ்டர் கனகராஜின் மரணத்திற்கு மறுநாள் 6.10.16 அன்று நடந்த அடக்க ஆராதனையில் இவரது சாட்சியை கேட்ட அனைவரும் இவருக்கு எதிராக முனுமுனுத்துள்ளார்கள்.

அவரது சாட்சியத்தில் பாஸ்டர் கனகராஜ் தனக்கு ஆறு மாதங்களாக சபை நடத்துவதற்கான ஊழியம் கொடுக்க வில்லை என்று ஆதங்கப்பட்டு பேசியதை பலர் தங்களது அலைபேசியில் பதிவு செய்துள்ளார்கள்.

பாஸ்டர் கனகராஜ் மரணமடைந்ததும் மாவட்டத்தின் பொறுப்பு பாஸ்டராக இவர் இருந்ததினால் சபை விசுவாசிகள் அனைவருக்கும் பாஸ்டர் மரணமடைந்ததாக இவரது அலைபேசி மூலமாக தகவலை இவர் வெளியிட்டார்.

அன்றைய தினம் உடனடியாக சபைக்கு வந்து பாஸ்டர் உடலை பார்த்த விசுவாசிகளிடம் உடலில் இருந்த காயத்திற்கு கழிப்பறையில் விழுந்து விட்டதாகவும்,  நெஞ்சுவலியால் அவராகவே கழுத்தை நெறித்து கொண்டதாகவும் பாஸ்டருக்கு சவரம் செய்யும் போது கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், பல செய்திகளை வெளியிட்ட இவர் அவசர அவசரமாக ஆலயத்திற்கு அருகிலிருந்த மருத்துவர் போஸ்வெல் செல்வ நாயகத்திடம் இறப்பு சான்றிதழ் வாங்கியுள்ளார்.

இதற்கு முன்பு இவ் ஆலயத்தில் இறந்த பாஸ்டர்கள் ஜார்ஜ், பெஞ்சமின், மைக்கேல், தேவராஜ் மற்றும் பல சகோதர சகோதரிகள் மரணமடைந்த போது சபையிலிருந்து மருத்துவரிடம் இறப்பு சான்றிதழ் பெற வில்லை.

கேள்விகள்

அவ்வாறு மருத்துவ சான்று வாங்குவது சபையின் மரபுமில்லை.அவ்வாறு இருக்கும்பட்சத்தில்

பாஸ்டர் கனகராஜ் இறப்பிற்கு இறப்பு சான்று வாங்கியதின் மர்மம் என்ன?

உடலில் உள்ள காயத்தினை பஞ்சை வைத்து மறைத்ததின் மர்மம் என்ன?

“ஹார்ட் அட்டக்” என்று சபையில் கூறியதன் காரணம் என்ன ?

சபையில் பாஸ்டர் கனகராஜிற்கு ஏற்பட்ட காயத்தை சபையில் விளக்காததின் காரணம் என்ன?

உதட்டில் பெவிக்காலை வைத்து ஒட்டியதன் காரணம் என்ன?

என சபை விசுவாசிகள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தற்போது பாஸ்டர் கனகராஜ் அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளி வந்துள்ளது.

இப்பிரேத பரிசோதனை அறிக்கையின்படி பாஸ்டர் கனகராஜை ஜான் தாமஸ் கொலை செய்தாரா ?அல்லது அவரது தூண்டுதலின்  பேரில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கேள்வி விசுவாசிகள் மத்தியில் எழும்பியுள்ளது.

தடயங்களை அழிக்க முயற்சி

மருத்துவ அறிக்கையின்படி பாஸ்டர் கனகராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் இக்கொலையை மறைப்பதற்கு மருத்துவ சான்றிதழ் வாங்கி தடயங்களை அழிக்க முயற்சி செய்த பாஸ்டர் ஜான் தாமஸ் ஒரு கொலை குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட கூடியவர்.

இவர் மட்டும் இந்த கொலையை மறைக்க  முயற்சிக்கவில்லை.இவருக்கு கீழ் பணியாற்றிய ஊழியர்களும் இவருக்கு உடந்தையாக இக்கொலையை மறைத்துள்ளதால் சட்டத்தின் முன் கொலை குற்றவாளிகளே !

இக்கொலையை மறைத்து மருத்துவ சான்று வழங்கிய மருத்துவரும் கொலை குற்றவாளியே!  என்பது தான் வழக்கறிஞர் அதிசய குமாரின் சந்தேக வாதங்கள்.

இன்று நிலைமை என்னவாக இருக்கும்? என்பதை இனி பார்ப்போமக…
    
நாம் ஒவ்வொருவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதினால் இந்திய தண்டனை சட்டத்தின் படி மேற்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் படி நாமும் நமது வாசகர்களுடன்  பிராத்திக்கின்றோம்.

நமது தலைமை நிருபர் – சங்கரமூர்த்தி – 7373141119

img-20161019-wa0012