தொகுதி உலா சங்கரன்கோவில்(தனி) யாருக்கு சாதகம்?

தினகரன் கைப்பற்றுகிறார்.

0
672
Advertisement

சங்கரன்கோவில்(தனி) யாருக்கு சாதகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோமதிஅம்மன் திருக்கோவில்,பாம்பாட்டி சித்தர் ஆலயம் உள்ளது. சங்கரன்கோவில் சுல்தான் பிரியாணி தமிழ்நாட்டின் சிறப்புகளில் ஒன்று.
சங்கரன்கோவில் மட்டுமே ஒரே நகராட்சி. இந்த தொகுதியில் சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர்,குருவிகுளம் ஒன்றியங்கள் அடக்கம். வைகோ வின் சொந்த தொகுதி இது.
தேவரினம்,தலீத்,யாதவர்,முதலியார்,இஸ்லாமியர் பெருவாரியாகவும். பிற சமூகத்தினர் பரவலாகவும் வாழ்ந்து வருகின்னறனர்.
அதிகமுறை அதிமுக வென்ற தொகுதி. திமுக வில் தங்கவேலு, அதிமுக வில் கருப்பசாமி,ராஜலட்சுமி என அமைச்சர்களாக இருந்துள்ளனர்.
1996ல் ஜெயலலிதாவே தோற்றபோது ௯ட அதிமுக வெற்றிபெற்ற தொகுதி.
கட்சிவாரியாக பார்த்தால் அதிமுக,திமுக,மதிமுக,புதிய தமிழகம் போன்றவைகள் வாக்குவங்கியை வைத்துள்ளன.
Advertisement

தற்போதைய நிலையில் தேர்தல் நடந்தால் வெற்றி யாருக்கு என்று தமிழ்செய்தி மூலம்  தொகுதி முழுவதும் அலசி ஆராய்ந்தோம்.

முடிவு அதிர்ச்சியாக இருந்தது.
திமுக ௯ட்டனி
கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளில் இந்த தேர்தலில் சிறிது சேதாரம் ஆகும் நிலையே உள்ளது. இஸ்லாமியர்கள் வாக்குகளில் சிறிய பகுதி இழக்கும் ௲ழ்நிலையே உள்ளது.
அதிமுக
இந்த கட்சி இந்த தொகுதியில் வரும் தேர்தலில் வைப்பு தொகையை பெறுமா என்பது வருத்தமான செய்தி. ஏனெனில்,இந்த தொகுதியில் அதிமுக வாக்கு வங்கியில் எண்பது சதவீத த்தை தினகரன் கட்சி கவர்ந்து விட்டது.
புதிய தமிழகம்
இதன் வாக்கு வங்கி அப்படியே உள்ளது.
அதிமுக ௯ட்டனி
அதிமுக,பாஜக,புதிய தமிழகம் என்று அணி சேர்ந்தால் இரண்டாம் இடத்திற்கு போட்டியிடலாம்.
அமமுக
இந்த தொகுதியை உறுதியாக தினகரன் கைப்பற்றுகிறார். குறிப்பிட்ட சமூக வாக்கே வெற்றியை தீர்மானிக்கிறது. அந்த சமூகத்தின் வாக்கு வங்கியில் தொண்ணூறு சதவீதம் அமமுக விற்கு கிடைக்கிறது. குறிப்பிட தக்க இஸ்லாமிய வாக்கும் வந்து சேரும் நிலை உள்ளது. இந்த வெற்றியில் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தின் பங்கு அதி முக்கியமாக உள்ளது.
அமமுக இந்த தொகுதியை வெல்வது உறுதி. இதன் வேட்பாளராக செல்லத்துரை என்பவர் களம் இறங்க உள்ளதாகவும், இப்போதே களப்பணியை ஆரம்பித்து விட்டதாகவும் உள்ளூர் ஊடகவியாளர் ஒருவர் நம்மிடம் ௯றினார்.
வைகோ வின் சொந்த தொகுதியில் குக்கர் விசிலடிக்கும் என்பதே எதார்த்த நிலை.