எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இப்படியா …நெல்லை திமுக செயலாளரின் லஞ்ச வேட்டை

ஸ்டாலின் கவனத்திற்கு

0
2194
Advertisement

சிவ பத்மநாபன்

Advertisement

திருநெல்வேலி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாபன், தென்காசி நகராட்சி ஆணையர் ஏகராஜ் அவர்களை கமிஷன் தரச்சொல்லி மிரட்டிய ஆடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது…

அதிமுகவில் நிலவி வரும் குழப்ப நிலையை தங்கள் கட்சிக்கு சாதகமாக பயன்படுத்தி நல்ல பெயரை கட்சிக்கு ஏற்படுத்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பெரும் முயற்சி எடுத்துவரும் வேளையில்…

ஆணையர் ஏகராஜ்

திருநெல்வேலி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாபன் போன்ற சில பிரமுகர்களின் இத்தகைய அடாவடி நடவடிக்கைகள் ஒட்டுமொத்த திமுக கட்சிக்கே அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றன.

எதிர்க்கட்சியாக இருக்கும்போதே அரசு அதிகாரியை மிரட்டி கமிஷன் கேட்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்று மக்கள் கேள்வி கேட்கும் அளவிற்கு திமுகவின் பெயரை சிவ பத்மநாபன் கெடுத்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது…

ஏற்கனவே திமுக மாவட்ட செயலாளராக இருந்த பிரமுகர் அனைத்து மட்ட நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து நல்ல முறையில் செயல்பட்டு வந்தாலும் அவர் மீது பொய்புகார்களை தலைமைக்கு அனுப்பி அவரை மாற்றச் செய்து அந்த இடத்திற்கு வந்து கட்சிப் பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார் சிவ பத்மநாபன் என்று அப்பகுதி கட்சி தொண்டர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

இருப்பினும் தன் மீது தலைமைக்கு அனுப்பப்படும் புகார்களை தலைமைக் கழகத்தில் செல்வாக்குடன் இருக்கும் ஒரு முக்கியப் பிரமுகரின் துணையுடன் செயல் தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு செல்லவிடாமல் சிவ பத்மநாபன் தொடர்ந்து தப்பித்து வருவதாக சொல்லப்படுகிறது…

இந்நிலையில் அரசு அதிகாரி கமிஷன் கேட்டு மிரட்டப்படும் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால் சிவ பத்மநாபன் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற தொண்டர்களின் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது…