திருவாரூர் அதிமுக வேட்பாளர் நாளை அறிவிப்பு: ஓ.பி.எஸ்..!

0
101
திருவாரூர் அதிமுக வேட்பாளர் நாளை அறிவிப்பு: ஓ.பி.எஸ்..!
Advertisement
Advertisement

திருவாரூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பது நாளை(ஜன.,7) அறிவிக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மேலும் அவர், தேர்தல் எப்போது நடந்தாலும், அதில் அதிமுக வெற்றி பெறும்.

நாளை காலை 9 – 10.30 மணிக்குள் அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் எனக்கூறினார்.

முன்னதாக , திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை,

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பது வேட்புமனு தாக்கலின் கடைசி நாளாக ஜனவரி 10 அன்று அறிவிக்கப்படும்.

கஜா புயல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேர்தல் கமிஷனே முடிவு செய்திருக்கலாம் என்பது எனது சொந்த கருத்து.

அதை விடுத்து தேர்தலை அறிவித்து விட்டு, அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்பதும், பண்டிகை காலமான ஜனவரியில் தேர்தல் வைப்பதும் சரியல்ல என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.