திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..!

0
175
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..!
Advertisement
Advertisement

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இங்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன.

இதையடுத்து 8 கால யாகசாலை பூஜைகள், கடந்த வியாழன் அன்று இரவு தொடங்கின. இன்று காலையுடன் 8 கால யாக பூஜைகள் நிறைவு பெற்றன.

இதைத் தொடர்ந்து இன்று காலை 9.10 மணிக்கு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வர சுவாமி, நீலோத்பாலாம்பிகா சமேத நகவிடங்க செண்பக தியாகராஜ சுவாமி, சனீஸ்வர பகவான் ஆகிய பிரதான மூர்த்திகள், பரிவார தெய்வங்கள் மற்றும் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது பக்தர்கள் அனைவர் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்த விழாவை ஒட்டி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.