டிஜிட்டல் இந்தியாவில் அசல் ஓட்டுநர் உரிமம் அவசியமா..?  

36
627
டிஜிட்டல் இந்தியாவில் அசல் ஓட்டுநர் உரிமம் அவசியமா..?  
Advertisement

டிஜிட்டல் இந்தியாவில் அசல் ஓட்டுநர் உரிமம் அவசியமா..?  

Advertisement

‘செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து அனைத்து வாகன ஓட்டிகளும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்’ என்று,

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 23-ம் தேதி தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தமிழக அரசின் ஆணையின்படி வரும் 1-ம் தேதி முதல் அசல் வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாத,

வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

எவ்வளவோ தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், அதை பயன்படுத்தாமல்,

அசல் ஆவணங்களைக் கையில் எடுத்துச்செல்ல வேண்டும் என்ற உத்தரவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

பல வளர்ந்த நாடுகளில் வாகன சோதனையின்போது ஓட்டுநர் உரிமம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஆனால் ஓட்டுநர் உரிமத்தின் எண்ணைத் தெரிவிக்க வேண்டும்.

அந்த எண்ணை ஸ்வைப் மிஷின் போன்ற கையடக்க கருவியில் போலீஸார் பதிவு செய்ததும், சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் முழு விவரமும் புகைப்படத்துடன் திரையில் தெரியும்.

இணையதள வசதியுடன் இருக்கும் இந்த கையடக்க கருவியின் விலை ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவுதான்.

ஓட்டுநர் உரிமத்தின் எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள முடியாதவர்கள் அதன் நகலை வைத்துக் கொண்டால் போதும்.

‘டிஜிட்டல் இந்தியா’ என்று கூறிக்கொண்டு, தேவையான இடத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல்,

வாகன ஓட்டிகளைச் சிரமப்படுத்துவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் கூறும்போது,

‘‘அசல் ஆவணங்கள் எடுத்துச் செல்லும்போது, சோதனை என்ற பெயரில் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அதைப் பறித்துக்கொண்டு,

மீண்டும் திருப்பிக் கொடுக்க அதிகளவில் லஞ்சம் வசூலிப்பார்கள். இதற்கு அரசு வழி செய்து கொடுக்கிறது’’ என்று தெரிவித்தார்.

மேலும் அனைத்து தரப்பு வாகன ஓட்டிகளும் இந்த அறிவிப்பால் அதிருப்தியில் உள்ளனர்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ரேஷன் கடை வரை உபயோகப்படுத்தும் போது இந்த ஓட்டுநர்கள் விபரம் அறியும் ஸ்வைப் மிஷினை உபயோகிக்கலமே..!

செய்திகள்: ரோகிணி