தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

0
102
தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!
Advertisement
Advertisement

தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல், அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் வடதமிழகம் மற்றும் புதுச்வையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும்.

நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் அடுத்த 2 இரவுகள் உறை பனி தொடரும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையையை பொறுத்தவரை காலை முதலே வெயில் விட்டு விட்டு அடிக்கிறது. சில சமயம் மேகமூட்டத்துடன் மழை வரும்போல காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பெய்ய உள்ள மழை குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன்,

டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூரின் ஒரு சில பகுதிகளிலும், புதுக்கோட்டை, சிவகங்கை,

தூத்துக்குடி, ராமநாதபரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகரின் ஒரு சில பகுதிகளிலும் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தெற்குப் பகுதியில் இருந்து மத்திய இந்தியா வரை மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது.

இதனால், தமிழகத்தின் தெற்கு மற்றும் டெல்டா பகுதிகளிலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

ராமேஸ்வரம் முதல் பாம்பன் மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி கடற்பகுதிகளிலும் மழை மேகங்கள் காணப்படுகின்றன.

ஒரு வேளை ஒரு சில இடங்களில் மட்டும் பலத்த மழை பெய்யலாம்.

தமிழகத்திலேயே தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகள் மட்டும் சற்று கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகளாக உள்ளன என்று கூறியுள்ளார்.