ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருக்கும் நிர்மலா தேவி..!

ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருக்கும் நிர்மலா தேவி..!
Advertisement
Advertisement

அருப்புக்கோட்டையில் பெண்களை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைத்தும் அவரால் சிறையிலிருந்து வெளி வர முடியாத சூழல் நிலவுகிறது.

அருப்புக்கோட்டையில் ஒரு கலை கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி.

இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் ஆசை வார்த்தை பேசி தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக அவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 17 -ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவர் சுமார் 300 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார்

அதன்படி அவருக்கு நேற்றைய தினம் நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.

இதையடுத்து அவர் நாளை சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்பட்டது. இந்நிலையில் அவர் வெளியே வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஒருவருக்கு ஜாமீன் கிடைத்தால் அவரது உறவினர்கள் ஜாமீன்தாரர்களாக பொறுப்பேற்று அழைத்து செல்வது வழக்கம்.

ஆனால் நிர்மலா தேவி விவகாரத்தில் அவ்வாறு ஜாமீன்தாரர்களாக பொறுப்பேற்று அழைத்து செல்ல யாரும் முன்வரவில்லை.

இதுகுறித்து அவரது உறவினர்களிடம் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பேசி வருதாக  கூறப்படுகிறது.