சுரேஷ்-கஜேந்திரகுமார் தலைமையில் புதிய அணி உதயமாகிறது

யாழ்ப்பாணத்தில்

0
264
Advertisement

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம்

Advertisement

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளுடன் பொது அமைப்புகளும் இணைந்து புதிய கூட்டணியாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தேர்தலை எதிர்கொள்ள

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது புதிய கூட்டணி அமைப்பது தொடர்பான தீர்மானத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளுடன் பொது அமைப்புகளும் இணைந்து புதிய கூட்டணியாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் இந்த தீர்மானம் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் ஏனைய அமைப்புக்களும் கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில் புதிய கூட்டணியின் உருவாக்கம் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை உத்தியோகபூர்வமான முடிவினை எடுத்து ஓரிரு நாட்களில் அறிக்கை ஒன்றை வெளியிடும் எனவும் குறிப்பிட்டார்.

செய்திகள்:- இலங்கையிலிருந்து நமது சிறப்பு செய்தியாளர்