மகனின் கனவுக்கு மரணத்தை பரிசாய் தந்த தாய்

சாதனையாளர்கள் எல்லோரும் வேதனையில் நொந்து… சோதனையில் நீந்தி வரவேண்டும்

0
1705
Advertisement
Advertisement

டிஜிட்டல் இந்தியா” ….!

கனவு திட்டங்கள் வெற்றியடைய இளைஞர்களுக்கு அழைப்பு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்….. நமது பாரத பிரதமர் நரேந்திரமோடி.

அரசியல் சதுரங்கத்தில் சாப்ட்வேர் தமிழனின்

மோடி.. கனவு காண்பதற்கு முன்பே விவசாய தொழில்நுட்ப தொலை தொடர்பு….. கனவு கண்ட சாப்ட்வேர் பொறியாளர்.. காரை திருசெல்வம் பற்றிய செய்திகளை “அரசியல் சதுரங்கத்தில் சாப்ட்வேர் தமிழனின் சங்கடம்” என்று நம் வெளியூட்டு இருந்தோம்.

“காரைக்குடி… ஆலம்பட்டு கல்யாணி ராமு தம்பதிகளின் தவபுதல்வன் கணினித்துறையில் கைநிறை சம்பாதிக்க வேண்டியவர் தற்போது, தாய் நாட்டுக்காக தனயனை தாரை வார்த்த பெற்ற தாய் கல்யாணியம்மையின் உடல் நலத்துக்காக,  மதுரை மீனாட்சி மருத்துவமனையில் உருக்குலைத்து இருக்கிறார் திருசெல்வம்.” என்று அந்த செய்தியில் குறிப்பிட்டு இருந்தோம் .

தாய் மண்ணுக்காக மகனின்.. கனவு நிறைவேறுமா? என்கின்ற கவலையிலே நேற்று (நவம்பர்-9) இரவு கண்களை மூடிக்கொண்டார்

தனது தாயார் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த இருக்கமன நேரத்தில்கூட தனது தாயின்….. விவசாய விழிப்புணர்வு கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கையில் தனது டிஜிட்டல் விவசாய ஒருங்கிணைப்பு திட்டத்தை நம்மிடையே பகிர்ந்த…..! திருசெல்வத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று புரியவில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே  திருசெல்வத்தின்  விவசாய ஒட்டு மெத்த நிரந்திர தீர்வுக்கான “டிஜிட்டல் விவசாயத் திட்டம்”….. செயல்பட்டு இருந்தால்.கல்யாணியம்மையாரின் மனம் குளித்திருக்கும்.

என்ன செய்வது… நமது நாட்டின் சாபக்கேடான சில அரசியல் இடைத்தரகர்கள்…  மற்றும் அரசியல் வியாபாரிகளிடையே, பெரும் வர்த்தக பேரத்தில்….அவர் கனவு நசுக்கப்பட்டது.

தாய் நாட்டை காக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடும், நமது டிஜிட்டல் பிரதமரின் கவனத்துக்கு……  திருசெல்வத்தின் திட்டத்தை H.ராஜா எடுத்து சென்றார்.

தாயாருக்கு பெரிய அதிர்ச்சியை தந்து விட்டது

ஆனால் என்ன காரணமோ இந்த கட்டமைப்பு திட்டத்தை தொடர்ந்து முயற்சிக்காமல் விட்டு விட்டார் H.ராஜா.

ஆந்திராவில் அரசியல் அரசில் எனது திட்டம் கை கழவிய போது…,
நமது  B.J.P. மோடி அரசு எனது திட்டத்தை கட்டாயம் ஆய்வுக்காகவது பரிந்துரை செய்யும் என்று நம்பியிருந்தேன்….!

அண்ணன் H.ராஜாவின் அரசியல் பணிகளில்…. என்ன காரணமோ தெரியவில்லை.. என்னுடன் இருந்த தொடர்பில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.

இது எனது தாயாருக்கு பெரிய அதிர்ச்சியை தந்து விட்டது.. அதுவே அவருக்கு பெரிய கவலையாகி படுக்கையில் கிடத்தி விட்டது என்றார் திருசெல்வம்.

சாதனையாளர்கள் எல்லோரும் வேதனையில் நொந்து… சோதனையில் நீந்தி வரவேண்டும் இது தான் வெற்றியாளர்களின் எழுதப்படாத விதி  என்று நாம் குறிப்பிட்ட நமக்கு வேதனையாக இருக்கிறது.

நாமும் திருசெல்வத்தின் நாட்டு நலப்பணி திட்டத்தை தமிழ் மாநில இளைஞர்அணி பொதுச் செயலாளர்.. வசந்தராஜன் வழியாக H.ராஜாவின் பார்வைக்கு  கொண்டுசெல்ல பரிந்துள்ளோம்.

நேர்மையின் பயணம் மெதுவானது…தான்.

அது 16- வருடம் என்பது தான் கொடுமை..!

அரசியல் சதுரங்கத்தில்… நமது நாட்டின் நலப்பணி நாசமாகி விடக்கூடாது.
என்பது தான் நமது வேண்டுகோள்

நாட்டின் நலனுக்காக தன் மகனின் நலத்தையே தாரைவார்த்த….
காரை..கல்யாணியம்மையாரின் ஆன்மா சாந்தியடைய….. நமது “தமிழ் செய்தி” யின் சார்பாக இறைவனிடத்தில் வேண்டி..! அஞ்சலி செய்கிறோம்…!

SHARE