சதித்திட்ட M.L.A.,கள்…அர்ஜூன் சம்பத்.

அர்ஜுன் சம்பத்

0
197
Advertisement

மூன்று பேர்களை கைதுசெய்ய வேண்டும்

Advertisement

இராம ரத யத்திரையில் இரத்த ஆறு ஒடும்…!  என்ற கொக்கரிப்பில், தமிழகத்தில் பதட்டமான சூழலை தூண்டும் பிரிவினை வாதிகளை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுவித்துள்ளார்.

அதில்மேலும் கூறியுள்ளதாவது:-

உத்திரப்பிரதேச மாநிலத்தில் துவங்கிய இராம இராஜ்ய இரத யாத்திரை ஆறு மாநிலங்கள் வழியாக வந்து தற்பொழுது கேரள மாநிலத்தில் வெகு சிறப்பாக அமைதியாக நடைபெற்று வருகின்றது. வரும் 20ம் தேதி செங்கோட்டை வழியாக தமிழகத்தில் நுழைந்து இராமேசுவரத்தில் நிறைவடைய உள்ளது.

இந்து இயக்கங்களின் சார்பில் ஆன்மீக அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காந்தி கண்ட கனவை நினைவாக்கவும் இந்த இராம இராஜ்ஜிய ரத யாத்திரை நடைபெறுகின்றது. நாடு முழுக்க இதற்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் இசுலாமிய அடிப்படைவாத அமைப்புக்களும், கிறிஸ்துவ அமைப்புக்களும், நக்சல் கம்யூனிச திராவிட இயக்கங்களும் இராம இராஜ்ய ரத யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பதட்ட சூழலை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

குறிப்பாக தமிமூன் அன்சாரி, கருணாஸ், தனயரசு உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் யாத்திரை குறித்து அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் தமிழர் அமைப்பு யாத்திரையை தடுத்து நிறுத்தவோம் என அறிவித்து தனது தொண்டர்களை திரட்டி வருகின்றது. யாத்திரை நடைபெற்றால் இரத்த ஆறு ஓடும் என மிரட்டி வருகின்றனர்.

இதுவரை யாத்திரை நடைபெற்ற எந்த மாநிலத்திலும் வன்முறையோ, எதிர்ப்போ கிடையாது. கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளத்தில் கூட யாத்திரை அமைதியாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

இசுலாமிய கிறிஸ்துவர் வசிக்கும் பகுதிகளில் கூட இந்த யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் யாத்திரையை நிறுத்த சதித்திட்டம் தீட்டி செயல்பட்டு வருகின்றனர்.

யாத்திரையை அரசியல் உள்னோக்கத்தோடு தடுக்க நினைக்கும் இந்து விரோதிகளான திரு.அபுபக்கர், (கடையநல்லூர் தொகுதி, நெல்லை மாவட்டம்) திரு.தமிமூன் அன்சாரி, (நாகப்பட்டினம், நாகை மாவட்டம்) திரு.தனியரசு, (காங்கேயம் தொகுதி, திருப்பூர் மாவட்டம்) திரு.கருணாஸ் (திருவாடனை தொகுதி, இராமநாதபுரம் மாவட்டம்) இந்த MLAக்கள் இன்று நடந்த தமிழக சட்டசபையில் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தக் கோரி கவன ஈர்ப்பு தீர்மாணம் கொண்டு வந்தனர்.

ஆனால் தமிழக சட்டசபை சபாநாயகர் திரு.தனபால் அவர்கள், அதை ஆரம்பத்திலேயே அனுமதிக்காமல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்து விரோதிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி அளிக்காத சட்டசபை சபாநாயகருக்கு, தமிழக அரசுக்கும், இந்து மக்கள் கட்சி நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கின்றது.

தமிழகத்தில் யாத்திரை நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் இ.ம.க. சார்பில் வரவேற்பு கொடுத்து பங்கெடுக்க உள்ளோம். மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களை ஆன்மீக வழியிலும், அறவழியிலும் சட்டப்படியும் எதிர் கொள்வோம்.

இராம இராஜ்யம் என்பது மகாத்மா காந்தி கண்ட கனவு. தமிழகத்தில் இராம இராஜ்ஜியம் உருவாகிட நாங்கள் உழைத்து வருகிறோம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் இதுவிஷயத்தில் நேரடி கவனம் கொடுத்து இராம இராஜ்ய யாத்திரைக்கு அனுமதியும் பாதுகாப்பும் கொடுத்து இதில் வன்முறையை தூண்ட நினைக்கும் நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புக்களை தடை செய்தும் தமிமூன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் உள்ளிட்டோரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தும் தமிழகத்தில் அமைதியை சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்  என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்

SHARE