திருபுவனம் பட்டு சேலைக்கு புவிசார் குறியீடு..!

திருபுவனம் பட்டு சேலைக்கு புவிசார் குறியீடு..!
Advertisement
Advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரியமிக்க திருபுவனம் பட்டு சேலைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடுஅங்கீகாரம் கிடைத்துள்ளது.

பாரம்பரியமாகவும் தனித்தன்மையுடன் பொருட்களை தயாரிக்கும் கலைஞர்களின் வாழக்கையை மேம்படுத்தவும்,

கலைநயமிக்க பொருட்களின் உற்பத்தி நலிவடையாமல் இருக்கவும், போலிகளை தடுத்திடவும் மத்திய அரசு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கிறது.

சர்வதேச சந்தைகளில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின சந்தை மதிப்பு உயர்ந்து, கலைஞர்களுக்கு நல்ல வருவாய் ஏற்படுத்திடவும் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்படுகிறது

அந்தவகையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருபுவனம் பட்டுப்புடவை பாரம்பரியமாக சோழ மன்னர்கள் காலத்திலிருந்து,

கலை நயத்துடன் அழகுற கைத்தறியால் உருவாக்கப்படுவதால் மத்திய அரசு திருபுவனம் பட்டுப் புடவைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரத்தை வழங்கி கொளரவித்துள்ளது.

இதுகுறித்து அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்:

5 ஆண்டு சட்ட போராட்டத்திற்குப் பின் திருபுவனம் பட்டுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

திருபுவனம் கைத்தறி பட்டு நெசவாளர்களை தவிர வேறு யாராவது நேரடியாகவோ, இணையதளம் மூலமாகவோ போலியாக விற்பனை செய்தால் சட்டப்படி குற்றம்.

தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் கலைத்தட்டு, நாச்சியார் கோயில் குத்துவிளக்குக்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்த நிலையில்,

திருபுவனம் பட்டுக்கும் புவிசார் அங்கீகாரம் கிடைத்துள்ளது தஞ்சை கலைகளுக்கு மேலும் பெருமை சேர்ந்துள்ளதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி கூறினார்.