தொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..!

0
302
தொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..!
Advertisement
Advertisement

தமிழர்களை பொறுத்த வரை தை மாதம் என்பது ஒரு சிறப்பு மிக்க மாதமாகும்.

இந்த தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும் ஒரு அற்புதமான பௌர்ணமியும் தைப்பூசமாக கொண்டப்படுகிறது.

தைப்பூசம் தினத்தில் தான் இந்த அகிலம் தோன்றியதாக ஒரு ஐதீகம் உள்ளது. இந்த நன்னாளானது முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.

அதோடு சிவனுக்கும், குருபகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும். பல சிறப்புக்கள் மிக்க தைப்பூசநாள் அன்று தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

தைப்பூச நாளில் காலையில் எழுந்து குளித்து விட்டு, நெற்றியில் திருநீறு அணிந்து, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம்,

கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தகலிவெண்பா போன்றவற்றயும் மாலை திருப்புகழ், படிக்கலாம்.

வேலைக்கு செல்வோர் கந்தனை காலையிலேயே பூஜித்து மனதார வணங்கிவிட்டு நாள் முழுவதும் கந்தனை நினைத்து “ஓம்சரவணபவ” என்னும் மந்திரத்தை உச்சரித்தவாறே வேலைகளை செய்யலாம்.

காலை மதியம் இரு வேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறந்தது.

உடம்பில் தெம்புள்ளவர்கள் காலை மாலை என இரு வேளையும் இந்நாளில் கோயிலுக்கு சென்று வழிபடுவது மேலும் சிறப்பு சேர்க்கும்.

முருக பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் தொடங்கிதைப் பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம்.

அன்னை பார்வதி விரதம் முருகனுக்கு ஞானவேல் வழங்கியது இந்த நன்னாளில் தான்.

அந்த ஞானவேல் கொண்டே ஞான பண்டிதன் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு. தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் பயனாக தீய சக்திகள் நம்மை அண்டாது.

தைப்பூசம் சிவனுக்கும் உகந்த நாளாகும். சிதம்பரத்தில் நடராஜ பெருமான் ஆனந்த நடனம் ஆடி பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி ஆகியோருக்கு தரிசனம் அளித்தது இந்த நன்னாளில் தான்.

ஆகையால் சிவபக்தர்களும், சிவனடியார்களும் சிவனை நினைத்து தைப்பூசம் விரதம் இருந்து மாலையில் சிவனை வழிபடுவது வழக்கம்.