3 நாளில் ரூ.500 கோடியை தாண்டிய மது விற்பனை…!

3 நாளில் ரூ.500 கோடியை தாண்டிய மது விற்பனை...!
Advertisement
Advertisement

பொங்கல் விடுமுறையையொட்டி 3 நாட்களில் மட்டும் ‘டாஸ்மாக்’ மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டியுள்ளது.  3 நாளில் ரூ.500 கோடியை தாண்டிய மது விற்பனை…!

பொதுவாக விழாக்களின் போது மதுப்பிரியர்கள் குஷியாகி விடுவது வழக்கம்.

குறிப்பாக, தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது விடுமுறை நாட்கள் கிடைப்பதால் மதுப்பிரியர்கள் உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைத்தது.

தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு 3 முதல் 5 நாட்கள் வரை விடுமுறை அளித்தது.

இதன் காரணமாக 5,140 மதுபான கடைகள் மூலம் போகி, பொங்கல், காணும் பொங்கல் 3 நாட்களில் மட்டும்,

மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட 10 சதவீதம் அதிகமாகும்.

கடந்த தீபாவளியின் போது ரூ. 328 கோடிக்கு மதுவிற்பனையானது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையில் அதைவிட கூடுதலாக ரூ.175 கோடிக்கு மதுபான விற்பனையாகியுள்ளது