லட்சுமி மேனன் விலகியதால் விஜய் சேதுபதிக்கு ஜோடியான தன்யா

33
1244
தன்யா
Advertisement
Advertisement

`கருப்பன்` படத்திலிருந்து லட்சுமி மேனன் விலகியதால் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா நடிக்க உள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவரும் விஜய் சேதுபதி தனது அடுத்தடுத்த படங்களை கவனமுடன்  தேர்வு செய்து வருகிறார்.

கடந்த வருடம் இவரது நடிப்பில் ஆறு படங்கள் வெளியாகி சாதனை படைத்தன. அதேபோல இந்த  வருடக் கணக்கை தனது ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தொடங்கவிருக்கிறார்.

இந்நிலையில் `விக்ரம் – வேதா’ படத்தில் ஒருபகுதியை முடித்த விஜய் சேதுபதி, தற்போது, ‘ரேணிகுண்டா’ இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கும் ‘கருப்பன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கொம்பு மீசையுடன் வரும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கவிருந்த நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து காயத்திற்காக சிகிச்சை பெற்று வரும் லட்சுமி மேனன் குணமாகி படப்பிடிப்புக்கு திரும்ப ஒரு சில மாதங்கள் ஆகும் என்பதால் படத்திலிருந்து லட்சுமி மேனன் விலகினார்.

இதனையடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரனை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.

சமீபத்தில் திரைக்கு வந்த `பலே வெள்ளையத் தேவா’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தன்யா தமிழில் அறிமுகமானார்.