புதுசேரி ரிசர்ட்டில் சீசா விளையாடும் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள்..!

30
760
புதுசேரி ரிசர்ட்டில் சீசா விளையாடும் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள்..!
Advertisement

புதுசேரி ரிசர்ட்டில் சீசா விளையாடும் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள்..!

Advertisement

புதுச்சேரியில் உள்ள ஆடம்பர சொகுசு விடுதியில் தங்கியுள்ள, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், புதுசேரி ரிசர்ட்டில் சீசா விளையாடும் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள்..!

‘வாக்கிங்’ மசாஜ், ஸ்விம்மிங், மது விருந்து, அசைவ உணவுகள் என, குதுாகலமாக பொழுதை கழித்து வருகின்றனர்.

   புதுசேரி ரிசர்ட்டில் சீசா விளையாடும் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள்..!  புதுச்சேரி கடற்கரையில் ஹாயாக வாக்கிங்க் செல்லும்  தமிழக எம்.எல்.ஏக்கள்..!

புதுச்சேரியில், சின்ன வீராம்பட்டினம் கிராமத்தில், ஒதுக்குப்புறமாக, கடற்கரையோரம் உள்ள,

‘தி வின்ட் ப்ளவர்’ ரிசார்ட் என்ற, ஆடம்பர சொகுசு விடுதியில், இவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெற்றிச்செல்வன் தவிர, 18 எம்.எல்.ஏ.,க்கள், நேற்று முன்தினம் இரவு சொகுசு விடுதிக்கு வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தங்கினர்.

பெண், எம்.எல்.ஏ.,க்கள் இருவர், தனியாக தங்கியுள்ளனர்.

தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் ஊஞ்சல், சீசா, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுக்கள் விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களை சந்திக்க தினகரன் இன்று (ஆக.,24) புதுச்சேரி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காலை 10.30 மணிக்கு தினகரன் புதுசு்சேரி ரிசார்ட்டிற்கு வர உள்ளார். அவருடன் மேலும் 3 எம்.எல்.ஏ.,க்கள் வர உள்ளதாக கூறப்படுகிறது.

ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., ஒருவர் இது பற்றி கூறுகையில்,

” நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவது, சட்டசபையை கூட்டுவது பற்றி கவர்னர் எதையும் கூறாமல் உள்ளது டென்ஷனாக உள்ளது.

இன்று மேலும் 3 எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரி ரிசார்ட்டிற்கு வர உள்ளனர். அவர்கள் வந்த பிறகு ஒன்றாக நாங்கள் ஆலோசிக்க உள்ளோம்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்ப்டுகிறது.

செய்திகள்: கவின்