மேகதாது அணை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு..!

0
105
tamilnadu-govt-files-an-petition-on-mekedatu-dam-issue
Advertisement
Advertisement

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கர்நாடகாவில்,பெங்களூரிலிருந்து, 100 கி.மீ., தொலைவிலுள்ள ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவின் மேகதாது பகுதியில்,

காவிரி நதிக்கு குறுக்கே, 5,912 கோடி ரூபாய் செலவில், புதிய அணை கட்டுவதற்கு, முந் தைய காங்கிரஸ் அரசில் திட்டம் தீட்டப்பட்டது.

அணையிலிருந்து, குறிப்பிட்ட அளவு நீரை, பெங்களூரு, ராம்நகர் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீராக வினியோகிக்கவும், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி, மத்திய நீர்வள ஆணையத்துக்கு, 2013ல், கர்நாடக அரசு, அறிக்கை தாக்கல் செய்தது.

அணை கட்டுவதால், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால்,தமிழக அரசு சார்பில்,எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடியிடம், முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார்.

தமிழக அரசின் கடும் எதிர்ப்புக் கிடை யிலும், மேகதாதுவில் அணை கட்டும், கர்நாடக அரசின் திட்டத்துக்கு, மத்திய நீர்வள ஆணையம், தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து தாக்கல் செய்யவும் அறிவுறுத்தி உள்ளது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு அளித்த அனுமதியை திரும்ப பெற வேண்டும்.

மத்திய நீர்வள ஆணையத்தின் அனுமதி தன்னிச்சையானது. காவிரியின் குறுக்கே எந்தவிதமான திட்டப்பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது எனக்கூறப்பட்டுள்ளது.