பொரிகடலைக்கு ஜி.எஸ்.டியை குறைக்க தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கதலைவர் கோரிக்கை..!

38
600
பொரிகடலைக்கு ஜி.எஸ்.டியை குறைக்க தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கதலைவர் கோரிக்கை..!
Advertisement

பொரிகடலைக்கு ஜி.எஸ்.டியை குறைக்க தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கதலைவர் கோரிக்கை..!

Advertisement

பொரிகடலை நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருளில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே..!

காலையில் இட்டிலிக்கு தொடும் சட்னி முதல் இரவு வரை அத்தியாவசிய உணவுப் பொருள் பொரிகடலை..

   

சமையலில் மட்டும் அல்ல ஒரு சிலர் இதனை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாகவும் பயன்படுத்துகின்றனர்.

இப்படி நமது அன்றாட வாழ்வில் ஊறிப்போன அத்தியாவசிய பொருளான பொட்டுகடலையின் விலை ஜி.எஸ்.டி வரியால் அதிகரித்துள்ளது.

இந்த விலை ஏற்றத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த வரி அதிகரிப்பு குறித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கதலைவரிடம் நமது செய்தியாளர் கேட்ட போது அவர் கூறியுள்ளதாவது :

                           

தற்போது அமலுக்கு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தில் பொரிகடலைக்கு ஆரம்பத்தில் 18% வரி என்று அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை வைத்ததின் பலனாக 12% என்று தெரிவிக்கப்பட்டது.

தென் இந்திய மக்களால் உபயோகப்படுத்தப்படும் பொருட்கள் பலவற்றிற்கு சரக்கு மற்றும் சேவை வரியில் HSN Code  இல்லாத காரணத்தினால்,

இந்தப் பொருட்களை அதற்கு தொடர்பில்லாத பல HSN Code- களில் சேர்த்து விட்ட காரணத்தினால் வரி விகிதம் கடுமையாக உள்ளது.

பொரிகடலை தயாரிக்கும் முறை :

உடைக்காத முழு கொண்டைக்கடலையில் இருக்கும் மேல் தொலியை நீக்கிவிட்டு, அதை உடைத்து பொரிகடலை தயாரிக்கப்படுகிறது.

இதில் எந்தவித ரசாயன மாற்றமும் கிடையாது. அரிசியிலிருந்து பொரியும், நெல்லிலிருந்து அவலும் இதே முறையில் தான் தயாரிக்கப்படுகிறது.

ஆனால் சரக்கு மற்றும் சேவை வரியில் அரிசி பொரிக்கும், அரிசி அவலுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 10 மாநிலங்களில் பொரிகடலை தயாரிப்பு நடைபெற்று வருகிறது. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயர் வைத்து அழைக்கப்படுகிறது.

உதாரணமாக் புதுடெல்லியில் Bhuna Channa என்று அழைக்கப்படுகிறது. வடஇந்தியாவில் பொரிகடலை பற்றி அதிகம் தெரியாததால்,

சரக்கும் மற்றும் சேவை வரிச் சட்டம் உருவாக்கிய அதிகாரிகள் Roasted Gram உடன் பொரிகடலையை சேர்த்துவிட்டார்கள்.

Roasted gram என்பது உப்பு, சீனி கலந்து எண்ணையில் சேர்த்து வறுத்து எடுப்பது ஆகும். Roasted gramக்கும் Fried Gramக்கும் தயாரிப்பு முறை வேறு.

ஆனால் Roasted gramக்கும், fried gram க்கும் வித்தியாசம் தெரியாத காரணத்தினால் 18 சதவிகிதம் மற்றும் 12 சதவிகிதம் வரி உள்ளது என கூறப்படுகிறது.

தமிழ்நாடு உணவுப்பொருள்கள் வியாபாரிகள் சங்கம் சார்பாக மாநிலத்தின் பல்வேறு  பகுதிகளில் உள்ள பொரிகடலை தயாரிப்பாளர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி,

அந்த கூட்டத்தின் இறுதி முடிவாக பொரிகடலை வரி நிவாரணம் பெற எல்லா சங்கமும் தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்திற்கு அதிகாரம் அளித்துள்ளது.

எனவே ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் உதவியுடன் பாராளுமன்ற உறுப்பினர், திரு. வி. மைத்ரேயன் மற்றும் திரு.ஆர். கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் பல முறை புதுடெல்லி சென்று,

மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லி, மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் திரு. வனஜா என்.சர்னா,

மத்திய வருவாய் துறை செயலாலர் திரு.ஹஷ்முக் ஆதியா ஆகியோரை புதுடெல்லியில் நேரில் சந்தித்து பொரிகடலை தயாரிக்கும் முறையை விளக்கி நிவாரணம் பெற கோரிக்கை வைத்து வந்துள்ளோம்.

தமிழகத்தின் சார்பாக சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலில் ஆஜராகும் மாண்புமிகு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தமிழக வணிக வரித்துறை அணையாளர் டாக்டர். சி. சந்திரமௌலி ஆகியோரிடம் விளக்கம் அளித்து வந்துள்ளோம்.

தமிழக அரசும் இந்த வரியை குறைக்கவே அல்லது நீக்கவே முயற்சி செய்வதாக உறுதி அளித்துள்ளது.

வருகின்ற 9ம் தேதியில் ஹைத்தரபாத்தில் நடைபெறும் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்

என்று  தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கதலைவர் ஜெயப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119