வீ மிஸ் யூ அயர்ன் லேடி..! சி.எம் புதிய டிபி..!

வீ மிஸ் யூ அயர்ன் லேடி..! சி.எம் புதிய டிபி..!
Advertisement
Advertisement

தமிழ்நாடு முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய முகப்புப்படம் பலரையும் கவர்ந்து இருக்கிறது.

தமிழ்நாடு முதல்வருக்கு அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இணையத்தில் இயங்கி வருகிறது. @CMOTamilNadu என்ற இந்த கணக்கு மிகவும் பிரபலம்.

இதை 1 லட்சம் பேர் வரை பாலோ செய்து வருகிறார்கள். தற்போது இந்த கணக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் இத்தனை நாட்கள் இந்த டிவிட்டர் கணக்கில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம்தான் இருந்தது.

வெள்ளை உடையில் முதல்வர் சிரித்தபடி இருக்கும் புகைப்படம்தான் இதில் இருந்தது. ஆனால் திடீர் என்று இந்த புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது.

பழைய புகைப்படத்திற்கு பதிலாக தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் புகைப்படம் வைக்கப்பட்டு இருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இரண்டாம் ஆண்டும் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த புதிய டிபி அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

படத்தின் மேல்பக்கம் அயர்ன்லேடி என்று எழுதப்பட்டு இருக்கிறது. கீழ் பக்கம், வீ மிஸ் யூ அம்மா என்று எழுதப்பட்டுள்ளது. இந்த புதிய டிபி பெரிய வைரலாகி உள்ளது.