தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு …!

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு ...!
Advertisement
Advertisement

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பொது மேலாளர், துணை பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 2 வருட ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணிக்கு குறைந்தது 5 வருடம் துறை சார்ந்து அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளன.

மேலும் குறைந்தப்பட்சம் 5 வருடங்கள் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு நடத்தி அதன்மூலமே பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும்.

தேர்வு செய்யப்படும் நபர்களை தேர்விற்கான முகவரி, தேதி மற்றும் நேரம் போன்ற தகவல்களை வழங்கி, அவர்களை தனித்தனியே வங்கியில் இருந்து அழைத்து நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 ஜனவரி 2019.

பணி: பொது மேலாளர் / துணை பொது மேலாளர்.

ஊதியம்: பொது மேலாளர்- ரூ. 1,40,000 (மாத வருமானம்)
துணை பொது மேலாளர்- ரூ. 1,25,000 (மாத வருமானம்)

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager,
Humar Resources Development,
Tamil Nadu Mercantile Bank Ltd.,
Head Office, #57, VE Road
Thoothukudi- 628002

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தபால் வழியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவே நேர்காணல் பற்றிய தகவல் வழங்கப்படும். விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வதில் வங்கியின் முடிவே இறுதியானது.